வருகின்ற ஜூன் 30,2016 முதல் நோக்கியா சிம்பியன் S60 மொபைலுக்கு வாட்ஸ்அப் செயல்பாடாது என்ற அறவிப்பை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஆதரவு
பேஸ்புக் நிறுவனத்தின் பிரபலமான வாட்ஸ்அப் செயலி குறிப்பிட்ட சில இயங்குதளங்களுக்கு வரும் ஜூன் 30 முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில இயங்குதளங்களில் வரும் ஆண்டுகளில் செயல்பாடது என புதிய கால அளவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் ஆரம்ப முதல் ஆண்ட்ராய்டு 2.3.3 இயங்குதளங்களுக்கு முந்தைய பதிப்பு , ஆப்பிள் ஐஓஎஸ் 6 மற்றும் ஐபோன் 3GS மேலும் வின்டோஸ் 7 போன்ற மொபைல்களுக்கு ஆதரவை நீக்கியிருந்ந நிலையில் மேலும் சில இயங்குதளங்களுக்கு ஆதரவை நீக்க உள்ள தகவலை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் நீக்கப்பட உள்ள ஓஎஸ் விபரம் பின் வருமாறு ;-
நோக்கியா சிம்பியன் S60 இறுதி நாள் ஜூன் 30, 2017
பிளாக்பெர்ரி OS மற்றும் பிளாக்பெர்ரி 10 இறுதி நாள் டிசம்பர் 31, 2017
வின்டோஸ் போன் 8 மற்றும் அதற்கு முந்தை பதிப்பு இறுதி நாள் 31, 2017
நோக்கியா S40 இறுதி நாள் டிசம்பர் 31, 2018
ஆண்ட்ராய்டு 2.3.7 மற்றும் அதற்கு முந்தைய தளங்கள் இறுதி நாள் பிப்ரவரி 1, 2020
For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com