Home Tech News வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் இணைக்க முயற்சி

வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் இணைக்க முயற்சி

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக விளங்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களுக்கிடைய தகவல் பரிமாற்றம் செய்வற்கான நோக்கத்தை ஃபேஸ்புக் முயற்சி செய்கின்றது.

இந்திய உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் வாட்ஸ்அப் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக உள்ள நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களும் அபரிதமான பங்களிப்பை கொண்டுள்ளன. குறிப்பாக இந்த மூன்று தளங்களும் தனத்தனியாக செயல்படுவதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது.

வாட்ஸ்ஆப் பயனர் ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலி பயன்படுத்துபவருக்கு தகவலை பரிமாற இயலும், அதே போல இன்ஸ்டாகிராம் தளத்திலிருந்து வாட்ஸ்ஆப்-க்கு தகவலை அனுப்பி வைக்கலாம். அதாவது ஒரு ஆப்பினை கொண்டு மற்ற இரு பிரிவு தளங்களில் உள்ள பயனாளர்களுக்கு தகவலை அனுப்ப இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று செயலிகளுக்கிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றம் முழுமையாக என்க்ரிப்ட் எனப்படும் பாதுகாப்பு சார்ந்த நடைமுறையின் கீழ் பரிமாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று தளங்களையும் ஒன்றாக இணைப்பதனால் , வாட்ஸ்ஆப் பயன்படுத்தாதவர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தினால் நீங்கள் வாட்ஸ்ஆப்பிலிருந்து மெசேஜ் செய்யலாம். இந்த முயற்சி தகவல் பரிமாற்றத்தை அதிகரிக்கும் என்பதனால் சாட்டிங் சேவையில் தொடர்ந்து ஃபேஸ்புக் தன்னை முதலாவதாக நிலைநிறுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்று நிறுவன இணைப்பு குறித்து தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version