நேரலையில் இருப்பிடத்தை பகிரும் சேவை வாட்ஸ்அப்பில் அறிமுகம்ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற வாட்ஸ்அப் செயலில் புதிதாக நேரலையில் இருப்பிடம் (Live Location) சார்ந்த சேவையை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

லைவ் லொகேஷன்

நிகழ்நேரத்தில் இருப்பிடத்தை பகிரும் வசதியை கூகுள் மேப்ஸ், டெலிகிராம் , ஐ மெஸேஜ், ஸ்நாப்சாட் உள்ளிட்ட செயலிகளில் முன்பே வழங்கப்பட்டு வரும் நிலையில் 100 கோடிக்கு மேற்பட்ட பயனாளர்களை பெற்ற வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறு பகிர்வது ?

மேம்படுத்தபட்ட வாட்ஸ்அப் செயலியை பெற்ற பயனாளர்கள் தங்களுடைய சாட் செய்யும் பகுதியில் Share Live Location என்ற பெயரில் இதற்கான வசதி தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி தனிநபர் சாட்டிங் மற்றும் க்ரூப் சாட்டிங் என இரண்டிலும் பெறலாம் என்பது இதன் சிறப்பாகும்.

நேரலையில் இருப்பிடத்தை பகிரும் சேவை வாட்ஸ்அப்பில் அறிமுகம்

நிகழ்நேர இருப்பிடம் சார்ந்த தகவலை பகிரும்போது குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் முதல் 8 மணி நேரம் வரை நாம் அந்த இடத்தில் இருக்கூடிய கால அளவை குறிப்பிட்டு பகிர்ந்து கொள்ளலாம். இதன் அடிப்படையாக நேரம் 1 மணி நேரமாக வழங்கப்பட்டுள்ளது.

நேரலையில் இருப்பிடத்தை பகிரும் சேவை வாட்ஸ்அப்பில் அறிமுகம்

இந்த சேவை பெரும்பாலான பயனாளர்களுக்கு மிகுந்த பயனை தருவதாக அமையலாம் என கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here