ஆண்டிராய்டு, ஐஒஎஸ் பயனாளர்களுக்கான ஸ்டிக்கர்கள் வெளியிட்ட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு

ஆண்டிராய்டு, ஐஒஎஸ் பயனாளர்களுக்கான ஸ்டிக்கர்களை சில வாரங்களில் வெளியிட்ட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வாட்ஸ்அப் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ பிளாக்கில் போஸ்ட் செய்துள்ளது. மேலும் சில ஐஒஎஸ் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இந்த அப்டேட் குறித்த அறிவிப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டிக்கர் பேக்கில், கிரையிங் புரோக்கன் ஹார்ட், ஸ்மைலிங் டீ கப் மற்றும் பல ஸ்டிக்கர்களுடன் சில ஓவிய வடிவங்களும் இடம் பெற்றுள்ளது.

ஆண்டிராய்டு, ஐஒஎஸ் பயனாளர்களுக்கான ஸ்டிக்கர்கள் வெளியிட்ட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவிப்பு
இதுகுறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட பிளாக் போஸ்டில், வாட்ஸ்அப் மெசேஜ்களில், எமோஜி மற்றும் கேமரா வசதிகளுடன் அனிமேட்டட் ஜிப் இமேஜ்களை பகிர்ந்து கொள்வது அதிகரித்து உள்ளது. இவர்களுக்கு உதவும் நோக்கிலேயே புதிய வாட்ஸ்அப் பீட்டா ஸ்டிக்கர் வெர்சன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவை வாட்ஸ்அப் வெர்சன் 2.18.329-களுக்கு மேல் அப்டேட் செய்யப்பட வேண்டும். இந்த ஸ்டிக்கர்களை பயன்படுத்தி கொள்வதோடு, புதிய ஸ்டிக்கர்களை உருவாக்கி விடவும் முடியும்