இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் UPI வசதி அறிமுகம்இந்தியாவில் டிஜிட்டல் சாரந்த பணபரிவரத்தனைகளுக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் முன்னணி சமூக வலைதளமான வாட்ஸ்அப் வாயிலாக பணத்தை பெறுவதற்கு , அனுப்புவதற்கு வசதியாக அரசின் UPI அடிப்படையிலான வாட்ஸ்அப் பேமெண்ட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப் பேமெண்ட் UPI

இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் UPI வசதி அறிமுகம்

மத்திய அரசின் டிஜிட்டல் சார்ந்த பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில் செயற்படுத்தப்பட்டு வரும் யூபிஐ (Unified Payments Interface – UPI) வசதியை பின்னணியாக கொண்டு வாட்ஸ்அப் பணத்தை அனுப்ப மற்றும் பெற வழிவகுத்துள்ளது.

வாட்ஸ்அப் பேமெண்ட் வசதியை பெற Settings > Payments பகுதிக்கு சென்ற பின்னர் உங்கள் யூபிஐ கணக்கினை பெற உங்களுடைய நடப்பு கணக்கு உள்ள வங்கியுடன் இணைக்கலாம். அவ்வாறு இணைக்கும்படசத்தில் உங்களுக்கு முன்பே யூபிஐ கணக்கு செயற்பாட்டில் இருந்தால் உடனடியாக பணத்தை அனுப்பலாம், அவ்வாறு இல்லை எனில், யூபிஐ ஆப் வாயிலாக புதிதாக கணக்கை திறந்து வாட்ஸ்அப் உடன் இணைத்து கணக்கை செயற்படுத்தலாம்.

ஐசிஐசிஐ வங்கி உடன் இணைந்து பேமெண்ட் வசதியை பீட்டா நிலையில் செயற்படுத்த தொடங்கியுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், VPA iD முறையை <mobilenumber>.wa.<3 letters>@icici என இவ்வாறு உருவாக்கியுள்ளது.

இனி எந்த நேரமும் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் வாட்ஸ்அப் வாயிலாக பணத்தை அனுப்ப மற்றும் பெற இயலும் வகையில் நடைமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here