whatsapp -app

உலகின் பிரசத்தி பெற்ற வாட்ஸ்ஆப் செயலி பழைய ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் இயங்குவதனை நிறுத்திக் கொள்வதற்கான அறிவிப்பை வருடந்தோறும் வெளியிட்டு வருகின்றது.

2021 ஆம் ஆண்டு முதல் iOS 9 அல்லது Android 4.0.3 இயங்குதள ஆதரவை பெற்று செயல்படும் மொபைல்களுக்கான ஆதரவை நிறுத்திக் கொள்வதாக உறுதிப்படுத்தியுள்ளது.

உங்களுடைய ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ் பதிப்பை அறிய

Android Users: Settings > About System or About Device

iPhone users: Go to Settings > General > Information

என்ற பகுதிக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

2020 பிப்ரவரி மாதம், ஆன்ட்ராய்டு பதிப்பு 2.3.7-க்கு முந்தைய பதிப்பு மற்றும் ஐஓஎஸ் 8-க்கு முந்தைய பதிப்புள்ள போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்ஆப் நிறுத்திக்கொண்டது.