வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடங்கி 10 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளதை கொண்டாடி வருகின்றது. கடந்த பிப்ரவரி 24, 2009 ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப் செயலி தொடங்கப்பட்டது. இன்றைக்கு உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாகவும், தகவல் பரிமாற்றத்தின் முதன்மையான தளமாக செயல்பட்டு வருகின்றது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற வாட்ஸ்ஆப் செயலி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தினசரி 150 கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் மட்டும் 20 கோடிகு அதிகமான பயனாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.
வாட்ஸ்ஆப் சுவாரஸ்யங்கள்
வாட்ஸ்அப் செயலில் உள்ள விசேஷ அம்சங்கள் எண்ணற்ற மக்களை கட்டிபோட வைக்க காரனம் 5 நபர்கள் மட்டுமே. 5 நபர்கள் உருவாக்கிய வாட்ஸ்அப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய டாப் 10 தகவல்களை பார்க்கலாம்.
1. வாட்ஸ் ஆப் வரலாறு
2007 ஆம் ஆண்டில் பிரெயின் ஏக்டான் மற்றும் ஜேன் குவம் யாகூ நிறுவனத்தில் இருந்து பதிவி விலகினர். அதன் பிறகு பேஸ்புக் நிறுவனத்தில் பணிக்காக விண்ணப்பங்களை அனுப்பியதில் இருவரும் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டில் ஜேன் குவம் ஐபோன் ஒன்றை வாங்குகிறார்.அதில் உள்ள ஆப்ஸ் போன்றவற்றை பற்றி ஓரளவு தெரிந்துகொள்கிறார்.அதே சமயத்தில் தன்னுடைய நண்பர் அலெக்ஸ் பிஷ்மென் என்பவரை சந்தித்து பேசுகையில் ஐபோன் டெவலெப்பர் பற்றி பேசுகையில் தொடரும் உரையாடல் வாயிலாக அலெக்ஸ் அறிமுகப்படுத்திய நண்பரான ரென்ட்ஏகோடர் தளத்தின் ரஷ்யாவின் இகோர் என்பவரின் உதவியுடன் (whats..up..!) வாட்ஸ்..அப் என்ற உருவான வார்த்தையில் உடனடியாக வாட்ஸ்ஆப் என்ற பெயருடன் தொடங்க திட்டமிடுகின்றனர்.
2. வாட்ஸ் ஆப் ஆரம்பம்
ஜேன் குவம் தன்னுடைய பிறந்த நாளான பிப்ரவரி 24 ,2009 யில் Whatsapp Inc என்ற பெயரில் இன்கார்பரேட்டட் என்ற பெயரில் கலிஃபோர்னியா மாகணத்தில் தொடங்குகின்றார்.ஆனால் பிரெயின் ஏக்டான் நிறுவனத்தின் பங்கேற்கவில்லை. வேலைக்கான முயற்சியிலே அவர் தொடர்ந்துள்ளார்.
அதிகார்ப்பூர்வமாக வாட்ஸ்ஆப் செயலி பிப்ரவரி 24, 2009 ஆம் ஆண்டு முதல் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டதை தனது பிறந்த நாளாக கொண்டாடுகின்றது.
Jan Koum (Right) and Brian Acton
3. முதல் முயற்சி
2009 யில் ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ் அப் 2.0 வெர்ஷனை வெளியிடுகின்றனர். வெளியிட்ட சில வாரங்களில் 2,50,000 ஆப்ஸ்கள் தரவிறக்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர். உடனடியாக மீண்டும் பிரெயினை சந்தித்த குவாம் வேலை இல்லாமல் இருப்பதை விட வந்து இதில் பணியாற்று என கூறியதை தொடர்ந்து வாட்ஸ் அப் செயலி யாகூவின் 5 முன்னாள் பணியாளர்களின் முயற்சியல் உருவெடுத்தது.
4. வேகமெடுத்த வாட்ஸ் அப்
நவம்பர் 2009 யில் ஆப்பிள் ஐஸ்டோர் வாயிலாக வாட்ஸ் அப் களமிறங்கியது. அதனை தொடர்ந்து இருமாதங்களில் பிளாக்பெர்ரி மொபைல்களில் களமிறங்கியது.
அதிகப்படியான பயணர்கள் அதிகரிப்பதனை கட்டுப்படுத்தும் நோக்கில் வாட்ஸ் அப் கட்டண சேவைக்கு மாற்றப்பட்டது. 2009 டிசம்பர் முதல் ஆப்பிள் வாட்ஸஅப் செயிலில் புகைப்படங்களை அனுப்பும் வசதியை பெற்றது.
2011 வாட்ஸ்அப் அமெரிக்காவின் ஆப்பிள் ஸ்டோரில் டாப் 20 ஆப்ஸ் வரிசையில் இடம்பிடித்தது.
5. வாட்ஸ்அப் பயணர் எண்கள்
- பிப்ரவரி 2013 வாட்ஸ்அப் பயணர்கள் 200 மில்லியன்
- டிசம்பர் 2013 வாட்ஸ் பயணர்கள் 400 மில்லியன்
- 22, ஏப்ரல் 2014 வாட்ஸ்அப் பயணர்கள் 500 மில்லியன் , 700 மில்லியன் புகைப்படங்கள் மற்றும் 100 மில்லியன் வீடியோக்கள் தினமும் பகிர்வு
- உங்களுக்கு தெரியுமா வாட்ஸ்அப் அதிக பயணர்களை கொண்ட தனிநாடு பட்டியலில் இந்தியா முதலிடம்
- 2015 ஆம் ஆண்டு வாட்ஸ்ஆப் வெப் சேவை தொடங்கப்பட்டது.
- பிப்ரவரி 2016 1 பில்லியன் என்கின்ற இமாலாய சாதனையை பெற்றது.
- ஜூன் 2016 தினமும் 100 மில்லியன் வாட்ஸ் அப் அழைப்புகள்
- 2016-ல் வீடியோ காலிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டது
6. நிராகரித்த பேஸ்புக் மற்றும் டிவிட்டர்
வாட்ஸ்-அப் உங்களுக்கு பிடிக்க காரணம் என்ன மறக்காமா கமெண்ட்ஸ் பன்னுங்க…..