வாட்ஸ்அப் செயலில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் பெரிதாக பலரை கவராத நிலையில் மீண்டும் பழைய வாட்ஸ்அப் வசதி தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்டேட்டஸ்
கடந்த பிபரவரி 24ந் தேதி அறிமுகம் படங்கள் , வீடியோ , GIF போன்றவற்றை வைக்கின்ற ஸ்டேட்டஸ் முறை 24 மணி நேரத்தில் மறைந்து விடும் நிலையில் உள்ளது. மேலும் இந்த ஸ்டேட்டஸ் ஸ்னாப்சாட் வசதியை போன்றதாக இருந்தது.
கூகுள் பிளே ஸ்டோரில் வழங்கப்பட்டுள்ள v2.17.107 வழியாக மீண்டும் பழைய வாட்ஸ்அப் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ‘Hey there I’m using WhatsApp’, or ‘Available’, ‘Busy’, ‘At work’, ‘Can’t talk’ போன்றவை மீண்டும் கிடைக்கின்றது. இதனை பெறுவதற்கு உங்கள் செயலியை மேம்படுத்துங்கள். ஐஒஎஸ் பதிப்பு மொபைல்களுக்கு விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.