வாட்ஸ்அப் புதிய அப்டேட் 'டெலிட் பார் எவ்ரிஒன்' ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்

பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்பாரம் ஆன வாட்ஸ்அப் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் எளிதாகவும், பாதுகாப்பானதாகவும் வாட்ஸ்அப்-ஐ மாற்றி கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஃபேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட வாட்ஸ்அப் நிறுவனம், தொடர்ச்சியாக பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ‘டெலிட் பார் எவ்ரிஒன்’ என்ற ஆப்சனை வெளியிட்டது. இந்த வசதி மூலம் பயனாளர்கள் தங்கள் அனுப்பிய மெசேஜ்-ஐ முழுமையாக டெலிட் செய்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப் புதிய அப்டேட் 'டெலிட் பார் எவ்ரிஒன்' ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்

முதலில் குறிப்பிட்ட அதாவது 7 நிமிடங்களில் மட்டுமே இதை டெலிட் செய்ய முடியும் என்று அறிவித்திருந்த வாட்ஸ்அப் நிறுவனம், பின்னர் அதை 8 நிமிடங்கள் மற்றும் 16 செகண்டுகள் என்று உயர்த்தியது. தற்போது இது மிகவும் பயனுள்ளதாகவும், வலுவான அப்டேட் என்றும் தெரிவித்துள்ளனர்.

WABetainfo, வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முன்னர் வெளியிட்ட அப்டேட்களில் மெசேஜ்கள் உடனடியாக டெலிட் ஆகி விடாது. தற்போது வெளியாகியுள்ள புதிய அப்டேட் மூலம், மெசேஜ் அனுப்பியவர்கள் 13 மணிநேரம் 8 நிமிடம் மற்றும் 16 செகண்டுகளில் மெசேஜ் டெலிட் ஆகி விடும். உதாரணமாக, ஒருவர் நண்பருக்கு அனுப்பிய மெசேஜ் டெலிட் செய்தால், அவரது நண்பருக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிட் ரேக்கவ்ஸ் செல்லும் வரை அது டெலிட் ஆகாது.

வாட்ஸ்அப் புதிய அப்டேட் 'டெலிட் பார் எவ்ரிஒன்' ஆப்சன் மிகவும் வலுவானது: அறிக்கையில் தகவல்

வாட்ஸ்அப் டெவலப்பர்கள் புதிய ஸ்டிக்கர்களை இணைக்க பணியாற்றி வருவதாகவும் ஆனாலும் இதற்கு எவ்வளவு நாள் ஆகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. இருந்தபோதும், சமீபத்தில் வெளியான புதிய அப்டேட்கள் மூலம் பல புதிய வசதிகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகலாம் என்று தெரிகிறது.