உலகின் மிக வேகமாக எழுதும் திறன் கொண்ட சோனி எஸ்டி கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சோனி எஸ்டி கார்டின் வேகம் 299MBps ஆகும். மேலும் இந்த சோனி SF-G வரிசை எஸ்டி கார்டுகள் வாட்டர் ப்ரூஃப் தன்மையை கொண்டதாகும்.

 சோனி எஸ்டி கார்டு

அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு வரவுள்ள இந்த சோனி SF-G வரிசை எஸ்டி கார்டுகள் அதிகபட்சமாக 300MBps வேகத்தில் தகவல்களை காப்பி செய்ய பயன்படுத்த இயலும் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சேமிப்பு அட்டைகள் 32GB, 64GB, மற்றும் 128GB போன்ற வகைகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து சோனி வெளியிட்டுள்ள அறிக்கையில் மிகவும் உயர்தரமான படங்கள் மற்றும் வீடியோவினை மிக துல்லியமாக பதிவு செய்யும் வகையிலான திறன்களையும் இந்த கார்டுகள் பெற்றுள்ளன. புகைப்பட கலைஞர்களுக்கு ஏற்ற இந்த எஸ்டி கார்டுகள் UHS-II போன்ற உயர்தர படங்களை சேமிக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்டி கார்டு சாக் , சூடான தன்மை , எக்ஸ்-ரே ப்ரூஃப் மற்றும் நீர் புகா அமைப்பு போன்றவற்றை பெற்றதாக விளங்குகின்றது. விலை குறித்தான எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.