எல்ஜி ஓஎல்இடி டிவியை சுருட்டி வைக்கலாம்

CES 2019 : லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சிஇஎஸ் 2019 அரங்கில் , சுருட்டி வைக்கும் வகையிலான 65 இன்ச்  ஓஎல்இடி டிவி மாடலை எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி டிவி ஆர் (LG Signature OLED TV R) என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

LG Signature OLED TV R

உலக டிவி வரலாற்றில் முதல் முறையாக சுறுக்கி வைக்கும் வகையிலான தொலைக்காட்சி மாடலாக விளங்குகின்ற எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி ஆர் மாடல் 65 அங்குல திரையை பெற்று 4கே ரெசில்யுசேன் கொண்டதாக கிடைக்கின்றது. இந்த டிவி தொலைக்காட்சி ந்தையில் மிகப்பெரிய வளர்ச்சியாக குறிப்பிடப்படுகின்றது.  கடந்தசர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் எல்.ஜி. இந்த டி.வி. மாடலின் ப்ரோடோடைப் பதிப்பை வெளியிட்டிருந்தது.

இந்த தொலைக்காட்சி மூன்று வகையான திரை தேர்வை கொண்டுள்ளது. முழு வியூ , லைன் வியூ மற்றும் ஜீரோ வியூ ஆகும். முழு வியூ வாயிலாக 65 அங்குல தொலைக்காட்சியை முழுமையாக காணலாம். லைன் வியூ வாயிலாக சிறிய தொலைக்காட்சி பெட்டியாக காணலாம். இந்த வியூ வாயிலாக பாடல்கள், கடிகாரம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம். ஜீரோ வியூ என்பதின் வாயிலாக டால்பி ஆடோம்ஸ் சிஸ்டத்துடன் கூடிய வகையில் இசையை பெறலாம்.

எல்ஜி ஓஎல்இடி டிவியை சுருட்டி வைக்கலாம்

கூகுள் ஹோம், அமேசான் அலெக்சா மற்றும் ஆப்பிள் ஏர்பிளே 2 போன்ற பல்வேறு அம்சங்களுடன் கிடைக்கும் எல்.ஜி. சிக்னேச்சர் OLED டி.வி. ஆர் விலை விபரம் வெளியாகவில்லை. சர்வதேச அளவில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரக்கூடும்.