ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 2017 அரங்கில் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்தியுள்ள ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ள 6 முக்கிய அறிவிப்புகளை இங்கே காணலாம்.!

1. ஐஓஎஸ் 11

ஆப்பிள் ஐபோன் மற்றும் ஆப்பிள் ஐபாட்களுக்கு என புதிதாக ஆப்பிள் ஐஓஎஸ் 11 வது இயங்குதளம் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய பதிப்பான ஐஓஎஸ் 10 தளத்தை விட பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் புதிய பயனாளர் இடைமுகத்தை பெற்றதாக அமைந்துள்ளது. ஆப்பிளின் சிரி அப் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் கிடைக்க உள்ளது.

ஆப்பிள் பே வாயிலாக ஐமெசேஞ் மூலம் பணத்தை அனுப்ப மற்றும் பெற வழி வகுக்கின்றது. ஜிபிஎஸ் அம்சத்தில் குறிப்பாக உள்ளரங்கில் நேவிகேஷன் மேம்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது. லைவ் போட்டோஸ், ஸ்க்ரீன் ரெகார்டிங், 3D டச் மற்றும் QR ஸ்கேன் போன்றவற்றுடன் வால்யூம், திரை வெளிச்சம் போன்றவற்றை கட்டுப்படுத்த ஏதுவாக பல அம்சங்களை மேம்படுத்தியுள்ளது.

2. மேக்ஓஎஸ் – ஹை சியரா

மேக் இயங்குதளத்திற்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹை சியரா  எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இயங்குதளம் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளின் பயன்பாட்டிற்கு கிடைக்க கூடியதாகும். புதிய ஹை சியரா பழைய ஆப்ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவர்களுக்கு இலவசமாக மேம்பாடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தனது சஃபாரி பிரவுசரில் பல்வேறு மேம்பாடுகள் வழங்கப்பட்டிருந்தாலும், குறிப்பாக சில தளங்களில் ஆடியோ மற்றும் வீடியோ ஆட்டோ ப்ளே ஆகின்ற வசதியை முற்றிலுமாக தடை செய்வற்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. இன்டலிஜென்ட் டிராக்கிங் ப்ரிவென்ஷன் வாயிலாக விளம்பரங்களை கட்டுபடுத்தலாம்.

மேக் வரிசை

  • 21.5-inch iMac விலை $1,099 (Rs. 70,720)
  • 21.5-inch, 4K விலை $1,299 ( Rs. 83,590)
  • 25-inch iMac Retina 5K விலை $1,799 ( Rs. 1,15,770)

டெக்ஸ்டாப்

  • iMac Pro டெக்ஸ்டாப் விலை $4,999 (ரூ.. 3,21,670)

3. ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர்

அமேஸான் ஹோம் ஈகோ மற்றும் கூகுள் ஹோம் போன்றவற்றுக்கு ஈடுக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ள ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஆப்பிள் வாய்ஸ் அசிஸ்டன்ஸ், சிரி, ம்யூசிக் சர்வீஸ் போன்றவற்றை பெறும் வகையிலும் தலைப்பு செய்திகள், பொது அறிவு வானிலை அறிக்கை மற்றும் ஸ்போர்ட்ஸ் தகவல்கள் போன்றவற்றை உடனுக்குடன் பெறலாம். இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

4. வாட்ச்ஓஎஸ் 4

ஸ்மார்ட்வாட்ச் ஆப்பிள் வாட்சின் ஓஎஸ் தளத்தில் புதிதாக சிரி வாய்ஸ் அசிஸ்ட் உள்பட பல்வேறு மேம்பாடுகளை பெற்ற ஆப்பிள் வாட்ச்ஓஎஸ் 4 பெற்றுள்ளது.

5. டிவிஓஎஸ்

ஆப்பிள் டிவி இயங்குதளத்தில் புதிதாக அமேசான் பிரைம் வீடியோ சேவையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதவிர ஓஎஸ் மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

6. புதிய ஐபேட் ப்ரோ

மேம்படுத்தப்பட்ட டேப்லெட்டான ஆப்பிளின் iPad Pro வரிசையில் புதியதாக 10.5 இன்ச் டிஸ்பிளே மாடல் மற்றும் முந்தைய 12.9 இன்ச் டிஸ்பிளே போன்றவற்றை பெற்றதாக வந்துள்ள இவற்றில் புதிய மேம்பட்ட செயல்திறன் பெற்ற A10X சிப்செட்களை பெற்றதாக வந்துள்ளது.

இவற்றின் விலை விபரம் 10.5-inch மாடல் $649 ( Rs. 41,700), மற்றும் 12.9-inch மாடல் $799 ( Rs. 51,400) இவற்றுக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.