apple

ஆப்பிள் வருடாந்திர உருவாக்குநர்கள் WWDC 2019 மாநாட்டில், பல்வேறு முக்கிய விபரங்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆப்பிள் ஐஓஎஸ் 13, ஐபேட் ஓஎஸ், வாட்ச்ஓஎஸ் 6, மேக் ப்ரோ, மேக்ஓஎஸ் காட்லினா , ஆப்பிள் மெமோஜி, பிரைவசி உட்பட மேலும் பல முக்கிய விபரங்களை வெளியிட்டுள்ளது.

5 நாட்கள் நடைபெற உள்ள 2019 WWDC மாநாட்டில், முதல் நாளில் ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஐபோன் மொபைல் ஓஎஸ் முற்றிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

WWDC 2019 சிறப்புகள்

புத்தம் புதிய ஆப்பிள் ஓஎஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஓஎஸ் முற்றிலும் பல்வேறு மேம்பாடுகளை கொண்டதாக வெளிவந்துள்ளது. டார்க் மோடு, இலகு மெமரி கொண்ட ஆப்ஸ் , புதிய ஆப்பிள் உள்நுழைவு போன்றவற்றை கொண்டதாக ஐஓஎஸ் 13 பெற்றுள்ளது.

ஆப்பிள் ஐஓஎஸ் 13

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபாட் கருவிக்கு என அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐஓஎஸ் 13 பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது. குறிப்பாக ஐபோன் 6s கருவிக்கு பிறகு வந்த அனைத்து மொபைல்களுக்கும் ஐஓஎஸ் 13 இயங்குதளம் கிடைக்க உள்ளது.

apple ios13

இமேஜ் எடிட்டிங் அம்சம், மெஷின் லெர்னிங் வசதியை உள்ளடக்கிய போட்டோஸ், போட்டோஸ் ஆப் வசதிகள், நேட்டிவ் டார்க் மோட் உள்ளிட்ட வசதிகளுடன், முந்தைய பதிப்பை விட தணியுரிமை சார்ந்த அம்சங்கள் முற்றிலும் மேம்படுத்தப்படுள்ளது.

ஆப்பிள் கார் பிளே, ஆப்பிள் வரைபடம், மெசேஜஸ், சிறி போன்றவை மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், 60 சதவீத ஆப்கள் இலகுவாக இயங்கும் வகையில் மெமரி குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவன iOS 13 இயங்குதளம் இந்த மாத இறுதி முதல் ஐபோன் 6எஸ் கருவிக்கு மேற்பட்ட அனைத்து மாடல்களிலும் கிடைக்கும்.

WWDC 2019: ஆப்பிள் ஐஓஎஸ் 13, ஐபேட் ஓஎஸ், வாட்ச்ஓஎஸ் 6, மேக் ப்ரோ, மேக்ஓஎஸ் காட்லினா

ஆப்பிள் வாட்ச், வாட்ச் ஓஎஸ் 6

பல்வேறு புதிய ஆப்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வதிகளை பெற்றதாக ஆப்பிள் வாட்ச் ஓஎஸ் 6 வெளிவந்துள்ளது. முதற்கட்டமாக உருவாக்குநர்களின் சோதனை ஓட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள இந்த ஓஎஸ் அடுத்த சில மாதங்களில் பொது பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

கால்குலேட்டர், வாய்ஸ்மெயில் மற்றும் ஆடியோபுக்ஸ் போன்றவற்றுடன் உடல் நலம் சார்ந்த ஹெல்த் சேவைகளை உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

apple watch os

ஆப்பிள் டிவி

ஆப்பிள் டிவிஓஎஸ் 13 இயங்குதளத்தில் 100க்கு மேற்பட்ட வீடியோ கேம்கள் ஆப்பிள் ஆர்கேட் மூலம் பெற்றுள்ளது. டிவி இயங்குதளத்தில், தற்போது Xbox One S மற்றும் சோனி பிளே ஸ்டேஷன் Dual Shock controller போன்றவற்றின் ஆதரவு இணைக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபேட் ஓஎஸ்

ஐபேட் மாடல்களுக்கு என பிரத்தியேகமான ஐபேட் ஓஎஸ் வெளியிடப்பட்டுள்ளது. ஐபேட், ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் மினி போன்றவற்றில் வெளியாக உள்ள இந்த ஓஎஸ் மிகச்சிறப்பான மாற்றத்தை பெற்றுள்ளது.

apple ipados