இந்தியர்கள் பணத்தை திருடும் ஆண்ட்ராய்டு மால்வேர் – கேஸ்பர்ஸ்கை

இந்தியர்களின் 40 சதவீத ஆண்ட்ராய்டு மொபைல்களை ஸ்சேஃப்காப்பி ட்ரோஜன் என்ற மொபைல் மால்வேர் வாயிலாக பணத்தை திருடுவதாக கேஸ்பர்ஸ்கை இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஸ்சேஃப்காப்பி ட்ரோஜன்

இந்தியர்களின் பயன்பாட்டில் ஆண்ட்ராய்டு சார்ந்த ஸ்மார்ட்போன் மிகப்பெரிய அளவில் உள்ள நிலையில், இதன் சார்ந்த தீம்பொருள்கள் பல்வேறு வகையிலான சிரமத்தை தந்து வருகின்றது.

பிரசத்தி பெற்ற கேஸ்பர்ஸ்கை ஆய்வகம் வழியாக கண்டறியப்பட்டுள்ள ஸ்சேஃப்காப்பி ட்ரோஜன் என பெயரிபடப்பட்டுள்ள மால்வேர் (Wireless Application Protocol -WAP) வேப் வாயிலாக பல்வேறு விதமான தீம்பொருட்களை செலுத்தி மொபைல் சார்ந்த சேவைக்கு கூடுதலான பணத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு பயனாளர்கள் தள்ளப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக பேட்டரிமாஸ்டர் உட்பட பல்வேறு அடிப்படை மென்பெருள்களில் இடம்பெற்றுள்ள இந்த தீம்பொருள் பயனாளர்களின் தகவல்களை தனக்கு சாதாகமாக பயன்படுத்திக் கொண்டு, குறிப்பாக வங்கி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது அதன் தரவுகளை திருடிக் கொள்கின்றன. அவர்களது அனுமதி இன்றி பல்வேறு விதமான வசதிகளை பயன்படுத்தும் வகையில் மாற்றிமைப்பதனால், அதற்கான கட்டணத்தை கூடுதலாக இவை பெற்றுக் கொள்கின்றன.

இது சர்வதேச அளவில் 47 நாடுகளில் 4,800 ஃபோன்களை ஒரே மாதத்தில் தாக்கியுள்ள தீம்பொருளின் 37.5 சதவீத தாக்குதல்கள் கேஸ்பர்ஸ்கை  இணைய பாதுகாப்பு மென்பொருளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 40 சதவீத ஆண்ட்ராய்டு மொபைல்கள் ஸ்சேஃப்காப்பி ட்ரோஜன் வாயிலாக தாக்கப்பட்டுள்ள நிலையில், நமது நாட்டை தொடர்ந்து ரஷ்யா, துருக்கி மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளை மட்டுமே தரவிறக்கவும், மூன்றாம் தர ஆப்களை மாற்று தளங்களில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என கேஸ்பர்ஸ்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Recommended For You