800 க்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் உங்கள் தகவலை திருடும் மற்றும் மால்வேர்களை நிறுவும் திறன் கொண்ட சேவியர் மால்வேர் உள்ளதாக டிரென்ட்மைக்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

சேவியர் மால்வேர்

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் இயங்குதளமாக உள்ள ஆண்ட்ராய்டு தளத்தில் பல்வேறு ஆப்ஸ்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் வாயிலாக தரவிறக்கம் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சேவியர் மால்வேர் போட்டோ எடிட்டிங், வால்பேப்பர், ரிங்க்டோன் சேஞ்சர் உள்பட பல்வேறு யுட்டிலிட்டி ரக செயிலிகளில் உள்ள தாக டிரென்ட் மைக்ரோ குறிப்பிடுகின்றது.

அதிகார்வப்பூர்வமற்ற தளங்களில் மட்டுமே ஒருகாலத்தில் ஆபத்தான தீப்பொருள் இருந்து வந்த நிலையில் தற்போது அதிகார்வப்பூர்வ Google Play ஸ்டோர் வாயிலாகவே பல்வேறு மால்வேர்களில் ஆபத்தான ட்ராஐன்கள் அடிப்பையிலான மால்வேர்கள் நிரம்பி உள்ளன. சமீபத்தில் ஜூடி என்ற தீம்பொருள் பெற்ற 40 ஆப்ஸ்காளல் 8.50 லட்சம் முதல் 36.50 லட்சம் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பாதிக்கப்படிருந்த நிலையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சேவியர் மால்வேர் 800 செயில்களில் Google Play ஸ்டோரில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்த தீம்பொருளால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதுடன்  அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளும், மற்ற நாடுகளிலும் இந்த பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மால்வேர் உங்களுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் தேவையற்ற ஆப்ஸ்கள் மற்றும் விளம்பரங்களை தானாகேவே க்ளிக் செய்து கொள்ளும் வகையில் செயல்படுகின்றதாம். எனவே கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப் என்றாலும் அதன் உருவாக்குநர் எனப்படும் டெவெலப்பர் விபரங்களை முழுமையாக அறிந்த பின்னர் தரவிறக்கம் செய்யுங்கள். உங்கள் மொபைலின் செட்டிங்க்ஸ் பகுதியில் உள்ள செக்கியூரிட்டி பிரிவில் இருக்கின்ற unknown source என்ற அனுமதி பொத்தானை சோதனை செய்துகொள்ளுங்கள்.