இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சியோமி 20000mAh Mi பவர் பேங் 2i -யில் 18 வாட்ஸ் ஆதரவுடன் கூடிய ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்துடன் ரூ.1,499 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த 20000 எம்ஏஎச் மி பவர் பேங்க் 2 ஐ பிளாக் சாண்ட்ஸ்டோன் பூச்சுடன் சியோமி எம்ஐ ஸ்டோர் மற்றும் mi.com மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது, இது மேக் இன் இந்தியா முயற்சியின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
பவர் பேங்க் 2i உயர் அடர்த்தி கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரிகளுடன் 20000 எம்ஏஎச் திறன் கொண்டது. இதில் இரட்டை யூஎஸ்பி போர்ட் பெற்றுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். இது மிகவும் பாதுகாப்பான அம்சமாக பிசி + ஏபிஎஸ் பொருளால் ஆனது எனவே இரு போர்ட் மூலம் 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் இருவழி சார்ஜ் அம்சத்தைக் கொண்டுள்ளது.
பவர் பேங்க் குறைந்த பேட்டரியை பெற்றிருந்தால் இரு முறை அழுத்தினால் சார்ஜிங் செய்வதற்கான அம்சத்துடன் வருகிறது இது புளூடூத் சாதனங்கள் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த கருவிகையும் சார்ஜ் செய்ய அனுமதிக்கின்றது. இந்த பவர்பேங்க் 5V / 2A, 9V / 2A, 5.1V / 2.4A, 12V / 1.5A சார்ஜிங்களுக்கு ஏற்றதாகும். வெப்பநிலை எதிர்ப்பு, குறுகிய சுற்றுவட்டத்திலிருந்து பாதுகாப்பு, ரீசெட்டிங் மெக்கானிசம், இன்புட் ஓவர்-வோல்டேஜ் பாதுகாப்பு, தவறான செருகலில் இருந்து பாதுகாப்பு என பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது.