இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கிய சாம்சங் நிறுவனத்தை வீழ்த்திய சீனாவின் சியோமி நிறுவனம் முதலிடத்தை பெற்று அசத்தியுள்ளது. இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் 27 சதவீத பங்களிப்பையும், சாம்சங் நிறுவனம் 25 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.

சியோமி ஸ்மார்ட்போன்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்னிலை வகித்து வந்த சாம்சங் நிறுவனம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது , குறிப்பாக ரூ.15,000 மற்றும் அதற்கு குறைவான விலை கொண்ட பட்ஜட் ரக மொபைல் பிரிவில் இந்நிறுவனம் கடுமையான வீழ்ச்சி அடைந்து வருகின்றது.

குறிப்பாக இந்திய சந்தையில் சியோமி தொடர்ந்து குறைந்த விலையில் மிக சிறப்பான வசதிகளுடன் கூடிய அசத்தலான ஸ்மார்ட்போன்களை பயனாளர்கள் விரும்பும் வசதிகளை வழங்கி வருகின்றது.

முந்தைய வருடத்தின் மூன்றாவது காலாண்டை விட நான்காவது காலண்டில் 300 சதவீத கூடுதல் வளர்ச்சி பெற்று , கடந்த Q4, 2017 -யில் சியோமி 8.2 மில்லியன் மொபைல்போன்களையும், சாம்சங் 7.3 மில்லியன் மொபைல்களையும் டெலிவரி செய்துள்ளதாக கானலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

canalys அறிக்கையின் விபரம்

இந்தியாவின் டாப் 5 ஸ்மார்ட்போன் பிராண்டுகள்

1 . சியோமி

2. சாம்சங்

3. விவோ

4. ஓப்போ

5. லெனோவா