சியோமி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் வேக் தி லேக் பிரசாரத்தின் கீழ் சிறப்பு  மாடலாக லேக் ப்ளூ நிறத்தில் சியோமி ரெட்மி நோட் 4 மொபைல் ரூ. 12,999 விலையில் இன்று பகல் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட் மற்றும் மி தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 4

பெங்களூரு மாநகரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வேக் தி லேக் (Wake the lake) என்ற பெயரில் பிரசாரத்தை தொடங்கியுள்ள சியோமி அதன் அடிப்படையில் லேக் ப்ளூ எனப்படும் நீல மாறுபாட்டில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

நிறத்தை தவிர வேறு  எவ்விதமான மாறுபாடுகளும் இல்லாமல் செப்டம்ப்ர் 4ந் தேதி 12.00 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் மி  இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ரெட்மி நோட் 4 நுட்ப விபரம்

ரெட்மி நோட் 4 மொபைலில் மார்ஷ்மெல்லா 6.0 இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட MIUI 8 இயங்குதளத்தில் செயல்படுகின்றது.  5.5 இன்ச் முழு ஹெச்டி திடையுடன்  (1080p) 2.5 D கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உயர்தரமான படங்களை வெளிப்படுத்தும் 13 மெகாபிக்சல் ரியர் கேமராவில் CMOS சென்சார் எல்இடி பிளாஷ் ,  f/2.0 அப்ரேச்சர் , PDAF ஆதரவுடன் விளங்கும். முன்பக்க கேமரா 5 மெகாபிக்சல்  கேமராவிலும் CMOS சென்சாரை பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 4 விலை பட்டியல்

2GB/ 32GB- Rs 9,999
3GB/32GB- Rs 10,999
4GB/64GB- Rs 12,999

லேக் ப்ளூ நிறத்தை தவிர கோல்டு ,கிரே சில்வர் மற்றும் கருப்பு என நான்கு விதமான வண்ணங்களில் கிடைக்க உள்ளது.