ரூ.54,999 விலையில் Mi QLED TV 4K விற்பனைக்கு வெளியானது
Cabinet For Tv On The White Plaster Wall In Living Room With Armchair And Sofa,Minimal Design,3D Rendering

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய Mi QLED TV 4K (55″) மாடல் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் பேட்ச் வால் 3.5 கொண்டு செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு ரூபாய் 54,999 விலையில் வெளியாகியுள்ளது.

மிக உயர் தரத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகளை பெறுவதுடன், உயர்தர கேமிங் அனுபவத்தினை பெறும் வகையில் 4K TV உடன் டால்பி விஷன், HDR 10+ மற்றும் Hybrid Log-Gamma (HLG) ஆதரவுடன் கூடுதலாக quantum dot நுட்பத்தை பெற்றுள்ளது.

Mi QLED TV 4K 55 அங்குல அல்ட்ரா-எச்டி 3840×2160 பிக்சல் தீர்மானத்துடன் QLED திரை கொண்டுள்ள மாடல் மீடியாடெக் MT9611 குவாட் கோர் பிராசெஸருடன் 2ஜிபி ரேம் உடன் 32 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, 30W திறன் பெற்ற 6 ஸ்பீக்கர்கள், 4 முழு ரேஞ்சு டிரைவர்ஸ், மற்றும் இரண்டு ட்வீட்டர்களை பெற்றுள்ளது.

மூன்று HDMI போர்ட் மற்றும் இரண்டு USB போர்ட் கொடுக்கபட்டு, ப்ளூடூத் 5 மற்றும் HDMI eARC உடன் வந்துள்ளது. இந்த டிவிக்கான ரிமோட்டில் அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் ஆகியவற்றுக்கு பிரத்தியேகமான பொத்தான்கள் உள்ளது.  Mi QLED TV 4K சில முக்கிய மென்பொருள் மேம்பாடுகளுடன் வருகிறது.

Mi QLED TV 4K இந்தியாவில் டிசம்பர் 21 அன்று மதியம் 12 மணிக்கு, பிளிப்கார்ட், மி.காம், மி ஹோம் கடைகள் மற்றும் விஜய் விற்பனை நிலையங்களில் கிடைக்க உள்ளது.