இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சியோமி மி ஏ1 மொபைல் விலை ரூ.14,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விள்பனைக்கு கிடைக்க உள்ளது.

சியோமி மி ஏ1 டூயல் கேமரா மொபைல் அறிமுகம் - முழுவிபரம்

சியோமி மி ஏ1

மிகவும் சிறப்பான புகைப்படத்தை பெறும் வகையில் உயர்தரமான இரட்டை 12 மெகாபிக்சல் கேமரா வசதி கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Mi A1 மொபைல் ஒன்பிளஸ் 5 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மொபைல்களை விட சிறப்பான படங்களை பெறுவதுடன் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சியோமி மி ஏ1 டூயல் கேமரா மொபைல் அறிமுகம் - முழுவிபரம்

டிசைன் & டிஸ்பிளே

மிக நேர்த்தியான முழு அலுமினியம் மெட்டல் பாடி கொண்டு வட்ட வடிவ கார்னிங் எட்ஜ் கொண்ட மொபைலாக கருப்பு, ரோஸ் கோல்டு மற்றும் கோல்டு ஆகிய நிறங்களுடன் 5.5 அங்குல முழு ஹெச்டி திரையுடன் 1920 x 1080 பிக்சல் தீர்மானத்துடன் கூடிய மி ஏ1 மொபைலில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வந்துள்ளது.

பிராசஸர் & ரேம்

ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் வகையிலான மி ஏ1 மொபைல் போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் பிராசஸருடன் கூடிய 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை கொண்டுள்ளது.

கேமரா துறை

கேமரா துறை பிரிவில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக ஒன்பிளஸ் 5 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கேமராவுக்கு இணையான வசதிகளை கொண்டு பின்புற இரட்டை கேமரா 12 மெகபிக்சல் பெற்றதாக 2X ஆப்டிகல் ஜூம் கொண்டதாக வந்துள்ளது.

முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சியோமி மி ஏ1 டூயல் கேமரா மொபைல் அறிமுகம் - முழுவிபரம்

 

பேட்டரி

மிக சிறப்பான பேட்டரி செயல்திறன் மிக்க மாடலாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மி ஏ1  மாடல் 3080 mAh பேட்டரிதிறன் கொண்டதாக கிடைக்கின்றது.

மற்றவை

ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை கொண்டுள்ள இந்த மொபைலுக்கு ஆண்ட்ராய்டு ஓரியோ மற்றும் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள ஆண்ட்ராய்டு பி உள்ளிட்ட அப்டேஸ் கிடைக்க உள்ளது.  ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5mm ஆடியோ ஜாக் போன்ற ஆதரவுகளை கொண்டதாகவும் வரவுள்ளது.

சியோமி மி ஏ1 டூயல் கேமரா மொபைல் அறிமுகம் - முழுவிபரம்

விலை

சியோமி Mi A1 மொபைல் ரூ.14,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

எங்கே வாங்கலாம்

வருகின்ற செப்டம்பர் 12ந் தேதி 12 மணிக்கு ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இதுதவிர ஆஃப்லைனில் பூர்வீகா, சங்கீதா,யூனிவர்செல் உள்ளிட்ட கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here