சியோமி நிறுவனத்தின் புதிய மி கார் சார்ஜர் மற்றும் மி 2-இன்-1 யூஎஸ்பி கேபிள் என இரு கேட்ஜெட்ஸ் கருவிகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

சியோமி மி கார் சார்ஜர்

மிக நேர்த்தியான மெட்டாலிக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கார் சார்ஜர் சிஎன்சி மில்லிங் செய்யப்பட்டு மிக நேர்த்தியான லேசர் கட்டிங் எட்ஜ் கொண்டதாக உள்ள சார்ஜர் 12V மற்றும் 24V பவர் தேர்வுகளில் இயங்கும் வகையில் உள்ள கருவியில் இணைக்கப்பட்டுள்ள கருவிக்கு ஏற்ப ஆற்றலை வழங்கும் திறன் பெற்றதாக கிடைக்கும்.

ஆப்பிள், சாம்சங், HTC, பிளாக்பெர்ரி, மற்றும் கூகிள் உள்ளிட்ட பல்வேறு பிராண்டு கருவிகளை இந்த கார் சார்ஜர் வாயிலாக இணைக்கலாம்.

மி கார் சார்ஜர் விலை ரூ.999 என அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் mi.com இணையத்தில் கிடைக்கின்ற சார்ஜருக்கு சிறப்பு சலுகையாக ரூ.200 குறைக்கப்பட்டு ரூ.799 விலையில் கிடைக்க தொடங்கியுள்ளது.

மி 2-இன்-1 யூஎஸ்பி கேபிள்

ரூ.399 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மி 2-இன்-1 யூஎஸ்பி கேபிள் சிறப்பு சலுகையாக ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.299 க்கு மி.காம் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

மி 2-இன்-1 யூஎஸ்பி கேபிள் (Micro-USB to Type-C) அதிகபட்சமாக 2.4A வரை சார்ஜிங் மின் திறனை வெளிப்படுத்தக்கூடியதாகும். இந்நிறுவனம் சமீபத்தில் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தில் செயல்படும் இரட்டை கேமரா செட்டப் பெற்ற சியோ மி ஏ1 மொபைலை ரூ.14,999 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.