ரூ.449-க்கு ஷியோமி Mi கார் சார்ஜர் பேசிக் விற்பனைக்கு வெளியானது

மிக விரைவாக சார்ஜாகின்ற குவால்காம் Quick Charge 3.0 நுட்பத்துடன் கூடிய ஷியோமி Mi கார் சார்ஜர் பேசிக் சார்ஜரை ரூ.449 விலையில் வெளியிட்டுள்ளது.  ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி வகிக்கும் ஷியோமி , ஃபிட்னஸ் சாதனம் முதல் பேக்பேக்ஸ், கார் சார்ஜர் வரை பலவற்றை விற்பனை செய்து வருகின்றது.

இந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இந்திய Mi India இணையதளத்தில் கிடைக்கின்ற இந்த சார்ஜர் கார்களில் உள்ள சிகரெட் லைட்டர் இடத்தில் பொருத்தி மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. கருமை நிறத்தில் மெட்டல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மீ கார் சார்ஜரில் இரண்டு மொபைல்களை ஒரே சமயத்தில் சார்ஜ் செய்யும் வகையில் யூஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சார்ஜ்ரில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சமே மிக விரைவாக சார்ஜ் ஆகின்ற வகையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பமான குவால்காம் Quick Charge 3.0 அம்சத்தை பெற்றுள்ளது. மேலும் அதிகப்படியான கரண்ட, குறைந்த வோல்டேஜ் மற்றும் வெப்பம் போன்ற தருனங்களில் மொபைலை பாதுகாப்புதுடன் 12V மற்றும் 24V என இரண்டிலும் செயல்படும்.

இருட்டான நேரங்களில் கார் சார்ஜரை எளிமையாக கண்டறிய நீல நிறத்திலான எல்இடி வளையத்தை பெற்றுள்ள இந்த சார்ஜர் விலை ரூ.449 ஆகும். MI இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. சமீபத்தில் ஷியோமி குறைந்த டேட்டாவில் செயல்படும் மின்ட் பிரவுசரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளியிட்டுள்ளது.