சியோமி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் பல்வேறு சேவைகளை இந்தியாவில் செயற்படுத்தி வரும் நிலையில் டிஜிட்டல் முறையிலான சியோமி Mi கிரெடிட் என்ற பெயரில் 5 நிமிடத்தில் தனிநபர் கடன் வழங்கும் சேவையை துவங்கியுள்ளது.
சியோமி Mi கிரெடிட் என்றால் என்ன ?
சியோமி நிறுவனம் நேரடியாக கடன் வழங்குவதில்லை மாறாக KYC சார்ந்த முழு செயல்முறையும், டிஜிட்டல் முறை மூலம் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பணத்தை விநியோகித்தல் ஆகியவை மேற்கொள்ளும். பணத்தை வழங்க இந்நிறுவனம் ஆதித்யா பிர்லா பைனான்ஸ் லிமிடெட், மனி வியூ, இயர்லி சேலரி, கிரெடிட் வித்யா, மற்றும் ஜெஸ்ட்மனி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது.
முன்பாக சோதனை முறையில் ரூ. 28 கோடி மதிப்புள்ள கடன்களை வழங்கியுள்ளது என்றும், வழங்கப்பட்ட கடன்களில் 20% மிக உயர்ந்த கடன் மதிப்பிற்கானது என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செயல்முறை 100% டிஜிட்டல் முறையில் செயற்படுத்த 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இது நிகழ்நேர பணத்தை பெறுவதற்கு அனைத்து முக்கிய வங்கிகளையும் ஆதரிக்கிறது. அதிகபட்சமாக ரூ.100,000 வரை வங்கப்படுவதுடன் குறைந்த வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது. மேலும் இலவசமாக கிரெடிட் ஸ்கோர் அறிந்து கொள்ளலாம்.
மீ கிரெடிட் பயனர்கள் கடனை ஒப்புதல் அளித்தவுடன் அதன் தொகையையும் திருப்பிச் செலுத்தும் காலத்தையும் தேர்வு செய்ய அனுமதிக்கிறது. திருப்பிச் செலுத்தும் காலத்தை 91 நாட்கள் முதல் 3 ஆண்டுகள் வரை வழங்குகின்றது. வட்டி விகிதங்கள் மாதத்திற்கு 1.35% முதல் தொடங்குகின்றது. சியோமி தன்னுடைய கடன் பெறுவோரின் தகவலை இந்தியாவில் அமைந்துள்ள டேட்டா மையத்தால் பாதுகாப்பாக சேமிக்கிறது.
கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து Mi கிரெடிட் ஆப் தரவிறக்கி Mi கணக்கு அல்லது தொலைபேசி எண் மூலம் பதிவு செய்யுங்கள்.
அடுத்து, KYC ஆவணங்களை பதிவேற்றவும் (ஐடி மற்றும் முகவரி சான்று) மற்றும் ஆன்லைன் சரிபார்ப்புக்கு தனிப்பட்ட விவரங்களைச் சேர்க்கவும்.
பரிவர்த்தனைகளை எளிதாக்க வங்கி விவரங்களைச் சேர்க்கவும்.
1,00,000 வரை கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் விரைவாக வழங்கப்படுகிறது.