சிறப்பு சலுகையுடன் சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல் ஏப்ரல் 5ந் தேதி ஆரம்பம்

வருகின்ற ஏப்ரல் 6ந் தேதி சியோமி இந்தியா நிறுவனத்தின் ஆறாம் ஆண்டு  சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல் விற்பனையில் சிறப்பு சலுகைகள் மற்றும் காம்போ ஆஃபரகள் உட்பட பல்வேறு சலுகைகள் என மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பிலான ஆஃபர்களை சியோமி வழங்க உள்ளது.

சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல்

இந்த சிறப்பு சலுகை திட்டங்கள் ஏப்ரல் 5 மற்றும் 6ந் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் Musical.ly இணையதளத்துடன் பங்கேற்று பிகிரும் போது சியோமி மி மிக்ஸ் 2S மொபைலை இலவசமாக வெல்லும் வாய்ப்பு மார்ச் 31 முதல் ஏப்ரல் 6ந் தேதி வரை நடைபெற உள்ளது.

முழுமையான சலுகை விபரங்களை அதிகார்வப்பூர்வமாக சியோமி அறிவிக்காத நிலையில், சில முக்கிய விபரங்கள் மற்றும் சலுகைகளை அறிந்து கொள்ளலாம். வருகின்ற ஏப்ரல் 5ந் தேதி பல்வேறு காம்போ சலுகைகளை இந்நிறுவனம் வழங்குகின்றது. மேலும் காம்போ டீல்கள் வாயிலாக  Mi டிவி 4A 32-inch, ரெட்மி Y1 Lite, மீ பேன்ட் HRX எடிணன் உட்பட பல்வேறு காம்போ ஆஃபர்கள் சலுகை விலையில் வழங்கப்பட உள்ளது.

இந்நிறுவனத்தின் மொபைல் கேஸ், மீ சார்ஜர், இயர்போன் போன்றவற்றுக்கு டிஸ்கவுன்ட், ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலை ஏப்ரல் 6ந் தேதி நள்ளிரவு வாங்கும்போது இலவசமாக மி இயர்போனை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு சலுகையுடன் சியோமி Mi ஃபேன் ஃபெஸ்டிவல் ஏப்ரல் 5ந் தேதி ஆரம்பம்

கூடுதலாக ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 6 வரை கலர் தி பிளானெட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சலுகை வாயிலாக ரெட்மி 5ஏ மொபைலை வழங்குகின்றது.

மேலும் அறிய  இணைய முகவரி –> http://event.mi.com/in/live2018/mff