இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற சியோமி நிறுவனத்தின் பிராண்டின் அங்கமாக பெங்களூரில் திறக்கப்பட்டுள்ள சியோமி Mi ஹோம் திறந்த 12 மணி நேரத்தில் 5 கோடி வருமானத்தை பெற்றுள்ளது.

வாவ்..! 12 மணி நேரம் சியோமி Mi ஹோம் வருமானம் தெரியுமா ?

சியோமி Mi ஹோம்

கடந்த சனிக்கிழமை பெங்களூரு மாநகரில் அமைந்துள்ள பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மாலில் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த மால் திறந்த 12 மணி நேரத்தில் ரூபாய் 5 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளதாக சியோமி தெரிவிக்கின்றது.

முதன்முதலாக பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு ஷோரூமில் ரெட்மி 4, ரெட்மி 4A, மற்றும் ரெட்மி நோட் 4, மற்றும் ஆடியோ ஆக்ச்செரீஸ்கள் உள்பட Mi விஆர் ப்ளே, Mi ஏர் ப்யூரிஃபையர் 2, Mi ரவுட்டர் 3C மற்றும் எம் பேண்ட் 2 என பல்வேறு கருவிகள் விற்பனை செய்யப்படுகின்றது.

வாவ்..! 12 மணி நேரம் சியோமி Mi ஹோம் வருமானம் தெரியுமா ?

முதல்நாளில் 10 ஆயரத்துக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சியோமி நிறுவனத்தின் முதல் எம்ஐ ஹோம் ஸ்டோரில் ஆஃப்லைன் வாயிலாக பொருட்கள் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 நகரங்களில் இது போன்ற கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சியோ நிறுவனத்தின் ரெட்மி 4 மொபைல் அமேஸான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ள நிலையில் இந்த மொபைல் தற்பொழுது எம்ஐ ஹோம் வாயிலாக ஆஃப்லைனில் கிடைக்கின்றது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here