₹ 999 விலையில் சியோமி Mi எல்இடி ஸ்மார்ட் பல்ப் இந்தியாவில் அறிமுகம்

சியோமி எம்ஐ எல்இடி ஸ்மார்ட் பல்ப் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பல்ப் 11 வருட ஆயுட் காலம், 16,000 மில்லியன் வண்ணங்களை வெளிப்படுத்துவதுடன் mi இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ரெட்மி Y3 மற்றும் ரெட்மி 7 மொபைல் அறிமுகத்தின் போது இந்த புதிய எல்இடி பல்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எல்இடி பல்பு முதன்முறையாக மொபைல் வேர்லடு காங்கிரஸ் அரங்கில் வெளிப்படுத்தப்பட்டது.

சியோமி Mi எல்இடி ஸ்மார்ட் பல்ப்

ஏப்ரல் 26 முதல் எம்ஐ.காம் வழியாகவும் க்ரவுட் ஃபண்டிங் வழியாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. முதல் 4000 பல்புகள் ரூபாய் 999 விலையிலும் கிடைக்கும். அதன் பிறகு பல்பின் விலை ரூ. 1,299 உயரத்தபட உள்ளது. தற்போது பதிவு செய்யப்படும் பல்புகள், மே 20 ஆம் தேதிக்கு பிறகு டெலிவரி தொடங்க உள்ளது.

அமேசானின் அலெக்ஸா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலம் இயக்கப்படும் வகையில் அமைந்துள்ள இந்த பல்பை எம்ஐ ஹோம் ஆப் மூலம் கட்டுப்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் பல்ப், ஆன் மற்றும் ஆஃப் செய்ய மீ ஹோம் ஆப் போதுமானதாகும்.

11 வருட ஆயுட் காலம் கொண்ட இந்த பல்பில் 16 மில்லியன் வண்ணங்களை பிரதிபலிக்கும் திறனுடன், எளிதாக வண்ணத்தை மாற்றுவதுடன், நம் தேவைக்கு ஏற்ப ஒளிரும் வெளிச்சத்தை எளிதில் மாற்றலாம்.