இன்று நண்பகல் 12.00 மணி முதல் இந்தியாவில் முதல்முறையாக சியோமி மி எல்இடி 4ஏ ப்ரோ ஸ்மார்ட் டிவி ( Xiaomi Mi LED TV 4A Pro 32) ரூபாய் 12,999 விலையில் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வெளியிடப்படுகின்றது. சில நாட்களுக்கு முன் ரெட்மி நோட் 7 வரிசை மொபைல் அறிமுகத்தின் போது இந்த எல்இடி டிவி விற்பனைக்கு அறிமுகமானது.
நண்பகல் 12.00 மணிக்கு பிளிப்கார்ட், மீ.காம், ஷியொமி மி ஹோம் ஸ்டோர்களில் இந்த டிவி விற்பனைக்கு தொடங்கப்படுகின்றது. 32-இன்ச் திரை கொண்ட ஆண்ட்ராய்டு அடிப்படையிலான தொலைக்காட்சி மாடலாக விளங்குகின்றது.
Xiaomi Mi LED TV 4A Pro 32 வசதிகள் மற்றும் சிறப்புகள்
32-இன்ச் மி எல்டி 4ஏ ப்ரோ மாடலில் எச்டி டிஸ்பிளே உடன் 1366 x 768 பிக்சல் தீர்மானம் , 60Hz ரிஃபெரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி கோண வைட் வியூவிங் ஏங்கிள் கொண்டு சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் விளங்குகின்று.
7வது தலைமுறை இமேஜினிங் என்ஜின் பெற்ற இந்த டிவியில் குவாட்-கோர் Amlogic கார்டெக்ஸ்- ஏ53 உடன் 750ஆர்ண மாலி-450 எம்பி ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்ட 8.1 ஓரியோ இயங்குதளம் பின்பற்றி வந்துள்ளது. இந்த தொலைக்காட்சியில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டுள்ளது.
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பல்வேறு செயலிகளின் ஆதரவுடன் கூடுதலாக கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டு Patchwall UI மூலம் இயக்கப்படுகின்றது. வை-ஃபை 802.11, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈத்தர்நெட், 3.5mm ஆடியோ ஜாக் போன்ற கூடுதல் ஆதரவுகளை பெற்றுள்ளது.