சியோமி மி நோட்புக் ப்ரோ லேப்டாப் வெளியீடு

ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடலுக்கு எதிராக சியோமி மி நோட்புக் ப்ரோ லேப்டாப் சீனாவில் இன்று வெளியிடப்பட்ட மி மிக்ஸ் 2 மற்றும் மி நோட் 3 ஆகிய ஸ்மார்ட்போன் மாடல்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி மி நோட்புக் ப்ரோ

சீனாவின் சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வரும் நிலையில், மேக்புக் ப்ரோ மாடலுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ள சியோமி மி நோட்புக் ப்ரோ லேப்டாப் வெளியிடப்பட்டுள்ளது.

15.6 அங்குல திரை பெற்ற இந்த லேப்டாப் மாடலில் கொரில்லா கார்னிங் கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சத்துடன் கூடிய டார்க் கிரே நிறத்தை பெற்ற மாடலில் இன்டெல் 8-வது தலைமுறை Kaby Lake-R பிராசஸர் கொண்ட நோட்புக் ப்ரோவில்  4GHz பெற்ற i7+16GB ரேம் , i7+8GB ரேம் மற்றும் i5+8GB ஆகிய மொத்தம் 3 வகையான ரேம்களில் கிடைக்கின்றது.

ஹார்மன் இன்ஃபினிட்டி ஸ்பிக்கர், டால்பி ஆட்ம்ஸ் ஆடியோ ஆகியவற்றுடன் Nvidia GeForce MX150 GPU கிராபிக்ஸ் பெற்றதாக வை-ஃபை, 3-in-1 SD ஸ்லாட் வசதியுடன், 60Wh திறன் பெற்ற பேட்டரியில் இயங்குகின்ற இக்கருவியை சார்ஜ் செய்வதற்கு 1C க்விக் சார்ஜ் வசதியை பெற்றுள்ளது. 35 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜாகும் என சியோமி தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஹலோ இயங்குதளத்துடன், கைரேகை சென்சார் லாக் பெற்ற டச்பேட் ஆகியவற்றையும் பெற்றுள்ளது.

சியோமி மி நோட்புக் ப்ரோ விலை பட்டியல்

மி நோட்புக் ப்ரோ i7+16GB RAM – RMB 6,999 ( Rs 68,700)

மி நோட்புக் ப்ரோ i7+8GB RAM – RMB 6,399 (Rs 62,900)

மி நோட்புக் ப்ரோ i5+8GB RAM – RMB 5,599 (Rs 55,000)

Recommended For You