ரூ.799 விலையில் Mi ஸ்மார்ட் எல்இடி பல்பு (B22) விற்பனைக்கு வந்தது

சியோமி நிறுவனத்தின் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளில் ஒன்றான Mi ஸ்மார்ட் எல்இடி பல்பு (B22) விற்பனைக்கு ரூ.799 விலையில் 16 மில்லியன் வண்ணங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள மி எல்இடி விளக்கு (சாதாரணமான B22 பல்பு ஹோல்டர்) கூகுள் மற்றும் அலெக்ஸா போன்ற வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியின் மூலம் இயக்க அனுமதிக்கின்றது. 9W பவர், 950 லுமினஸ் பிரைட்னஸ், 11 ஆண்டுகள் அல்லது 25,000 மணி நேரம் (நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம்) நீடித்து உழைக்கக் கூடியது. 220V முதல் 240V வரையில் 0.07A மூலம் இயங்கும்.

இந்த ஸ்மார்ட் பல்பில் மி ஹோம் ஆப் வழியாக வைஃபை உடன் இணைக்க முடியும். இதில் உள்ள ஒளிரும் பாலிகார்பனேட் மேற்பரப்பு உயர் ஒளிவிலகல் குறியீட்டையும், மென்மையான மற்றும் அதிக பிரகாசமான ஒளியை வெளிப்படுத்தும்.