ரூ.13,999-க்கு சியோமி மி டிவி 4ஏ விற்பனைக்கு அறிமுகமானதுஇந்தியாவில் சியோமி நிறுவனம், ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கி வரும் நிலையில், தொலைக்காட்சி சந்தையில் மிகவும் சவாலாக ரூ.13,999 ஆரம்ப விலையில் 32 அங்குல சியோமி மி டிவி 4ஏ மற்றும் 43 அங்குல சியோமி மி டிவி 4ஏ மாடல் என இரு வகையில் வெளியிட்டுள்ளது.

சியோமி மி டிவி 4ஏ

இந்தியாவில் எல்இடி தொலைக்காட்சி விற்பனையில் சாம்சங், சோனி, எல்ஜி, மைக்ரோமேக்ஸ் உட்பட பல்வேறு நிறுவனங்கள் முன்னணி வகித்து வருகின்ற நிலையில் சியோமி நிறுவனத்தின் மி டிவி 4 மாடலை தொடர்ந்து ஸ்மார்ட் அம்சங்களை பெற்ற இரண்டு விதமான திரை அகலத்தை பெற்ற மி டிவி 4ஏ வெளியாகியுள்ளது.

Mi TV 4A 32-inch

எல்இடி பேனலை பெற்று விளங்கும் 32 அங்குல தொலைக்காட்சியில் 1366 x 768 பிக்சல் தீர்மானத்துடன் விளங்கும் இந்த டிவியை 178 டிகிரி கோண அளவு வரை மிக தெளிவாக காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி குவாட் கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் A53 சிப்செட் கொண்டு ஆண்ட்ராய்டு அடிப்படையிலான PatchWall UI கொண்டு இயக்கப்படுகின்றது.

இந்த தொலைக்காட்சி 4 கிலோ கிராம் எடையுடன், 1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் கூடியதாக வை-ஃபை, இரண்டு HDMI, யூஎஸ்பி போர்ட், ஒரு எதர்நெட் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்ட சியோமி Mi TV 4A 32 இன்ச் விலை ரூ.13,999 ஆகும்.

Mi TV 4A 43-inch

எல்இடி பேனலை பெற்று விளங்கும் 43 அங்குல தொலைக்காட்சியில் 1080 பிக்சல் தீர்மானத்துடன் விளங்கும் இந்த டிவியை 178 டிகிரி கோண அளவு வரை மிக தெளிவாக காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொலைக்காட்சி குவாட் கோர் அம்லாஜிக் T962 கோர் A53 CPU கொண்டு ஆண்ட்ராய்டு அடிப்படையிலான PatchWall UI கொண்டு இயக்கப்படுகின்றது.

இந்த தொலைக்காட்சி 7.8 கிலோ கிராம் எடையுடன், 1ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் கூடியதாக டுயல் பேண்ட் வை-ஃபை, இரண்டு HDMI, இரண்டு யூஎஸ்பி போர்ட், ஒரு எதர்நெட் உட்பட கஸ்டமைஸ் செய்யும் வகையிலான டால்பி ஆடியோ ஸ்பிக்கர்கள் என பல்வேறு அம்சங்களை கொண்ட சியோமி Mi TV 4A 43 இன்ச் விலை ரூ.22,999 ஆகும்.

வருகின்ற மார்ச் 13ந் தேதி முதல் சியோமி மி டிவி 4ஏ ஃபிளிப்கார்ட் மற்றும் mi.com இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.