சியோமி Mi டிவி 4C விலை விபரம் வெளியானது43 இன்ச் அகலம் கொண்ட ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை சியோமி இந்தியாவில் வெளியிட உள்ள நிலையில் இந்த தொலைக் காட்சி விலை அதிகார்வப்பூர்வ mi.com இணையத்தின் வாயிலாக சியோமி Mi டிவி 4C விலை ரூ. 27,999 என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சியோமி Mi டிவி 4C விலை

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி வகிக்கின்ற சியோமி நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளது, விற்பனையில் உள்ள சியோமி Mi டிவி 4 விலையை விட ரூ.12,000 குறைவாக அமைந்திருக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வருகின்ற மார்ச் 7ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள மி டிவி 4சி எல்இடி தொலைக்காட்சியில் 43 அங்குல திரை விகிதம் பெற்றதாக குவாட்-கோர் 64-gpl & HLG மற்றும் HDR 10-ஐ ஆதரிக்கும் Amlogic T962 உடன் கூடிய 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டதாக வரவுள்ள இந்த மாடலில் வை-ஃபை 802.11ac (2.4/5 GHz dual-band Wi-Fi), ப்ளூடூத் 4.2 மற்றும் டால்பி மற்றும் டிடிஎஸ் ஆடியோ போன்ற அம்சங்களை பெற்றிருக்கும்.

மி டிவி 4ஏ

இதைத்தவிர மற்றொரு மாடலாக சியோமி மி டிவி 4ஏ மாடல் 32 இன்ச் எல்இடி திரையுடன் 1.5GHz குவாட்கோர் அம்லாஜிக் 962-எஸ்எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் – மாலி-450 எம்பி3 ஜிபியு கொண்டு விளங்கும் மாடலில் கூடுதல் அம்சங்களாக வைபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை மற்றும் முழுமையான நுட்பவிபரங்கள் ஆகியவை நாளை அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.