அசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் சியோமி நிறுவனம் புதிதாக சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களை சீனாவில் வெளியிட்டு எல்ஜி, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்தியாவில் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சியோமி ஸ்மார்ட் டிவி

புதிதாக அறிமுகம் செயப்பட்டுள்ள நவீன தலைமுறை ஸ்மார்ட் தொலைக் காட்சிகள் 33 அங்குலம் முதல் 55 அங்குலம் வரை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக சியோமி மி டிவி 4சி, மி டிவி 4எக்ஸ், மற்றும் மி டிவி 4எஸ் என மொத்தம் மூன்று டிவிகள் வெளியிடப்பட்டுள்ளது.

அசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது

சியோமி மி டிவி 4சி

சீனாவில்  CNY 999 (ரூ.10,600 இந்தியா) மதிப்பில் வெளியிடப்பட்டுள்ள சியோமி Mi TV 4C தொலைக் காட்சியில் 32-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை பெற்றதாக கொண்டு 1366 x 768 பிக்சல் தீர்மானம் பெற்று ARM அட்வான்ஸ்டு மல்டி கோர் நுட்பத்துடன் கூடிய 1.5GHz உடன் 1ஜிபி ரேம் பெற்று 4ஜிபி சேமிப்பு திறனை கொண்டுள்ளது.  ஆண்டராய்டு அடிப்படையிலான இயங்குதளத்தை பெற்று இரண்டு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் பெற்றதாக வந்துள்ளது.

சியோமி மி டிவி 4எஸ்

சீனாவில் CNY 1799 (ரூ.19,100 இந்தியா) மதிப்பில் வெளியிடப்பட்டுள்ள சியோமி Mi TV 4S தொலைக் காட்சியில் 43-இன்ச் 4K  அல்டராஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பை பெற்றதாக கொண்ட தீர்மானம் பெற்று ARM அட்வான்ஸ்டு மல்டி கோர் நுட்பத்துடன் கூடிய 1.5GHz உடன் 1ஜிபி ரேம் பெற்று 8ஜிபி சேமிப்பு திறனை கொண்டுள்ளது. மற்றொரு வேரியன்டாக வந்துள்ள CNY 3499 (ரூ.35,100) 55 இன்ச் 4K  அல்டராஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பை பெற்றதாக கொண்ட தீர்மானம் பெற்று ARM அட்வான்ஸ்டு மல்டி கோர் நுட்பத்துடன் கூடிய 1.5GHz உடன் 2 ஜிபி ரேம் பெற்று 8ஜிபி சேமிப்பு திறனை கொண்டுள்ளது   ஆண்டராய்டு அடிப்படையிலான இயங்குதளத்தை பெற்று வைஃபை, ப்ளூடுத் , இரண்டு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் பெற்றதாக வந்துள்ளது.

அசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது

சியோமி மி டிவி 4எக்ஸ்

55 அங்குல திரையை கொண்டுள்ள இந்த சியோமி Mi TV 4X தொலைக் காட்சியில் 3840×2160 பிக்சல் தீர்மானம் கொண்டதாக வரவுள்ளது. 64-பிட் குவாட்-கோர் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். H.264 / 265 டிகோடிங் ஆதரவுடன் டால்பி ஆடியோ / டிடிஎஸ்-எச்டி ஆடியோ டிகோடிங் மற்றும் ப்ளூடூத் ஆடியோ ரிமோட் கண்ட்ரோல் ஆகிய விருப்பங்களை பெற்றுள்ளது.

சியோமி Mi TV 4X விலை CNY 2,799 (ரூ. 29,800)

Comments are closed.