குறைந்த டேட்டாவில் இயங்கும் ஷியோமி மின்ட் பிரவுசர்

இந்தியாவில் ஷியோமி மொபைல் தயாரிப்பு நிறுவனம் மிக சிறப்பபான வளர்ச்சி பெற்று வரும் நிலையில் , புதிதாக ஆண்ட்ராய்டு லைட்வெயிட் செயலியாக ஷியோமி மின்ட் பிரவுசர் (Xiaomi Mint browser) ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகம் செய்துள்ளது.

மிக இலகுவாக, வேகமாக இயங்கும் செயலிகள் பயனாளர்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நிலையில் இந்தியாவின் முன்னணி மொபைல் ஓன் தயாரிப்பாளராக விளங்கும் சியோமி நிறுவனம், பல்வேறு ஆப்களை அறிமுகம் செய்து வரும் வரிசையில் புதிதாக மின்ட்  என்ற பெயரில் பிரவுசர் ஒன்றை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு என 11 MB மட்டுமே பெற்றதாக கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ளது. இந்த பிரவுசர் கூகுள் குரோம் உட்பட போட்டியாளர்களுக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறைவான டேட்டா, வாய்ஸ் செர்ச், இரவு நேரங்களில் பயன்படுத்த டார்க் மோட், இலகுவாக இணையங்களை சேமிக்க புக்மார்க்ஸ், மற்றும் ஹிஸ்டரி போன்றவற்றை அறிய வழி வகுக்கின்றது. மேலும் பிரைவேட் பிரவுசிங் வசதி என பலவற்றை பெற்றுள்ள இந்த பிரவுசர் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்கு மேற்பட்ட இயங்குதளங்களில் செயல்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் ரெட்மி, ஷியோமி மொபைல் போன்களில் உள்ள MIUI இயங்குதளத்தில் அடிப்படை பிரவுசராக மின்ட் இணைக்கப்பட வாய்ப்புள்ளதால் லட்சக்கணக்கான பயனார்களை இந்த பிரவுசர் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.