இந்தியர்களை மிகவும் கவர்ந்த சியோமி போன்கள் :  ஆய்வில் தகவல்

இந்தியாவில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன் வாங்க விரும்புபவர்களின் முதல் தேர்வாக சியோமி நிறுவன ஸ்மார்ட் போன் இருந்து வருவதாக இதுகுறித்து நடந்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் அந்த ஆய்வில், வாடிக்காயாளர்களின் இரண்டாவது தேர்வாக சாம்சங் பிராண்ட் இருந்து வருகிறது. 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பட்ஜெட்டில் ஒன்பிளஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

10 முதல் 15 ஆயிரம் பட்ஜெட்டில் ஸ்மார்ட் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களில் மூன்றில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆன்லைன் சேல்லில், சியோமி நிறுவனத்தின் 2.5 மில்லியன் ஸ்மார்ட் போன்கள், இரண்டரை நாட்களுக்கு உள்ளாகவே விற்பனையாகியுள்ளன.

இந்தியர்களை மிகவும் கவர்ந்த சியோமி போன்கள் :  ஆய்வில் தகவல்

இதுகுறித்து சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் 9ம் தேதி மற்றும் அக்டோபர் 11ம் தேதி ஆகிய நாட்களில் சியோமி நிறுவனத்தின், ஸ்மார்ட்போன்கள், LED டிவிகள், மீ பேன்ட் 3, மீ பவர் பேங்க், மீ இயர்போன்கள், மீ ரூட்டர்கள் மற்றும் மீ எக்கோ சிஸ்டம் போன்றவற்றை அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல், பிளிக்கார்ட் பிக் பில்லியன் டேஸ் மற்றும் எம்ஐ.காமின் மீ சூப்பர் சேல் ஆகியவற்றின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனையின் போது “Consumer Lens” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் சியோமி தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களில் மூன்று பேரில் ஒருவர் இந்தியர் என்பது தெரிய வந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்து பேசிய சீனியர் ஆய்வாளர் பவெல் நையா, மொபைல் போன் பயன்படுத்துபவர்களில் இந்தியர்கள் அதிகமானவர்கள் எங்கள் நிறுவன போன்களை தேர்வு செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப எங்கள் தயாரிப்புகளில் பல்வேறு மாற்றங்களை செய்து மேம்படுத்தி வருகிறோம் இந்த ஆய்வு 10,000 – 15,000 ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வாகும் என்றார்.