இந்தியாவின் மொபைல் போன் சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் சாம்சங் நிறுவனத்துக்கு மிகவும் சவாலாக சியோமி விளங்குகின்றது.

இந்திய மொபைல் போன் சந்தை

மிக வேகமாக வளர்ந்து 4ஜி சேவை சார்ந்த மொபைல் போன்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முதன்மையான இடத்தை பெற்றுள்ள சாம்சங் நிறுவனம் 23.5 சதவீத சந்தை மதிப்புடன் விளங்கும் நிலையில், இதற்கு இனையான சந்தை மதிப்பை நடப்பு வருடத்தின் மூன்றாவது காலாண்டில் சியோமி நிறுவனம் பெற்று விளங்குகின்றது.

சர்வதேச டேட்டா கார்ப்ரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு வருடத்தின் மூன்றாவது காலாண்டில் அதிகபட்சமாக 39 மில்லியன் அலகுகள் விற்பனை செய்துள்ள நிலையில், இது முந்தைய ஆண்டின் காலண்டை விட 40 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.

முதலிடத்தில் சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்திய சந்தையில் 23.5 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் 23.5 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது.

லெனோவா நிறுவனத்தின் லெனோவா மற்றும் மோட்டோ பிராண்டுகளின் சந்தை மதிப்பு 9 சதவீதம் பங்களிப்பை கொண்டிருக்கின்ற நிலையில் அதனை தொடர்ந்து விவோ 8.5 சதவீதமும், ஒப்போ 7.9 சதவீதம் அதனை தொடர்ந்து மற்ற நிறுவனங்கள் 27.6 சதவீத சந்தை மதிப்பை கொண்டுள்ளது.

மிகவும் சவாலான விலையில் பல்வேறு வசதிகளை கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் சீனாவின் சியோமி நிறுவனம் பண்டிகை காலத்தில் சாம்சங் நிறுவனத்துக்கு ஈடான வளர்ச்சி பெற்றுள்ளது.