இந்திய சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வருகின்ற சியோமி நிறுவனத்தின் புதிய சியோமி ரெட்மி 4 மூன்று வகையான வேரியன்டில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

ரூ. 6,999 விலையில் சியோமி ரெட்மி 4 இன்று முதல் கிடைக்கும்

சியோமி ரெட்மி 4

இன்று முதல் mi.com மற்றும் அமேசான் தளத்தில் முன்பதிவு தொடங்கப்படுகின்ற சியோமி ரெட்மி 4 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு மே 23ந் தேதி பகல் 12 மணிக்கு கிடைக்க உள்ளது.

சியோமி ரெட்மி 4 மொபைலில் 5 அங்குல ஹெச்டி 720×1280 பிக்சல் தீர்மானத்துடன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 SoC பிராசஸர் பெற்று 2GB ரேம் வசதியுடன் 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்றுள்ளது. இதுதவிர 3ஜிபி ரேம் வசதியுடன் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம் வசதியுடன் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக சேமிப்பு வசதியை 128 ஜிபி வரை அதிகரிக்க மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

ரூ. 6,999 விலையில் சியோமி ரெட்மி 4 இன்று முதல் கிடைக்கும்

இதில் 13 மெகாபிக்சல் ரியர் கேமரா வழங்கப்பட்டு f/2.0 aperture, PDAF மற்றும் எல்இடி ஃபிளாஷ் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது. இதில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் 4100mAh பேட்டரியை பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லா 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI 8 தளத்தில் செயல்படுகின்ற ரெட்மி 4 மொபைலில்  4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, GPS/ A-GPS, மைக்ரோயூஎஸ்பி உடன் OTG, புளூடூத் v4.1 மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 4 விலை பட்டியல்

2GB RAM/ 16GB ரூ. 6,999

3GB RAM/ 32GB ரூ. 8,999,

4GB RAM/ 64GB ரூ.. 10,999

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here