இந்திய சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் சீனாவை மையமாக கொண்டு செயல்படும் சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் ரக சியோமி ரெட்மி 4ஏ மொபைல் போனில் கூடுதலாக புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 4ஏ 3GB ரேம், 32GB மெம்மரி மொபைல் அறிமுகம்

சியோமி ரெட்மி 4A 3GB ரேம்

ரூ. 5,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 4ஏ மொபைல் 2ஜிபி ரேம் பெற்றதாக கிடைத்து வந்த நிலையில் தற்போது 3ஜிபி ரேம் பெற்ற மாடல் வெளியாகியுள்ளது.

சியோமி ரெட்மி 4ஏ 3GB ரேம், 32GB மெம்மரி மொபைல் அறிமுகம்

ரெட்மி 4A  மொபைலின் 5 அங்குல HD 720×1280 பிக்சல் தீர்மானத்துடன் 1.4GHz  க்வாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 SoC பெற்று 3GB ரேம் உடன் இணைந்து செயல்படுகின்ற ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லா 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI 8  தளத்தை பெற்றுள்ளது.

32GB உள்ளடங்கிய மெமரி உடன் கூடுதலாக மெமரியை அதிகரிக்க 128GB மைக்ரோ எஸ்டி அட்டையுடன் கிடைக்கின்றது.

கேமரா

f/2.2, 5 லென்ஸ் சிஸ்டம், மற்றும் PDAF ஆகிய 13 மெகாபிக்சல் பின்புற கேமராவுடன்  செயல்படுகின்ற 5 மெகாபிக்சல் கேமராவினை முன்பக்கத்தில் பெற்றுள்ளது.

சியோமி ரெட்மி 4ஏ 3GB ரேம், 32GB மெம்மரி மொபைல் அறிமுகம்

பேட்டரி

3120mAh திறன் கொண்ட பேட்டரி ஆப்ஷனுடன் விளங்குகின்றது. ரெட்மி 4A மொபைல்களில் கூடுதல் வசதிகளாக  Wi-Fi, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3.5மிமீ ஆடியோ ஜாக், FM ரேடியோ. ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ , VoLTE மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.

சியோமி ரெட்மி 4ஏ 3GB ரேம், 32GB மெம்மரி மொபைல் அறிமுகம்

விலை

ரூ.6999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள சியோமி ரெட்மி 4A எம்ஐ.காம் , பேடிஎம், ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு பெற்று 2ஜிபி ரேம் பெற்ற மாடல் ரூ.5,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

சியோமி ரெட்மி 4ஏ 3GB ரேம், 32GB மெம்மரி மொபைல் அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here