பிரபலமான ஜியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் ரூ.9,999 முதல் ரூ.12,999 வரையிலான மூன்று விலைகளில் கிடைத்து வருகின்றது. இந்த நிலையில் ஒரு தளத்தில் ரூ.499 விலையில் கிடைப்பதாக செய்தி பரவி வருகின்றது… இது உண்மையா ?

ரூ. 499 க்கு ஜியோமி ரெட்மி நோட் 4 உண்மையா ?

 

ஜியோமி ரெட்மி நோட் 4

 • ரூ.9999 விலையில் ஜியோமி ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது.
 • அமேஸான் தளத்தை போன்ற வடிவமைப்பு கொண்ட தளத்தில் இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.
 • இது உண்மையான தளம் அல்ல போலியான மற்றும் வைரஸ் தளமாகும்.

ரூ. 499 க்கு ஜியோமி ரெட்மி நோட் 4 உண்மையா ?

 

வாட்ஸ்அப் உள்பட பெரும்பாலான சமூக வலைதளங்கள் மிக விரைவான தகவல் தொடர்பை ஏற்படுத்தியுள்ள இந்த காலகட்டங்களில் உண்மையை விட போலி செய்திகளே விரைவாக பரவி வருகின்றது.

இந்நிலையில் http://mi-offers.com/  என்ற பெயரில் அமேஸான் தளத்தை போன்ற வடிவமைப்பை பெற்ற ஒருதளத்தில் அமேஸான் தளத்தின் ஃபுல்ஃபில்டு லோகோவுடன் இந்த செய்தி பகிரப்படுகின்றது. ஆனால் உண்மையில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் mi.com மற்றும் ஃபிளிப்காரட் தளத்தில் மட்டுமே கிடைக்கின்றது என்பதனை மறந்து விடாதீர்கள்.

அதிரடி விலை சலுகை என எந்தவொரு செய்தி அறிவிக்கப்பட்டு வரும் விளம்பரங்களை க்ளிக் செய்வதனை முடிந்தவரை தவிர்த்திடுங்கள், இது போன்ற தளங்கள் வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் நிறைந்தவையாகும். இதுபோன்ற தளங்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை விரைவாக திருடிவிடும் என்பதனால் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் முன்னணி செய்திதளங்களில் வராத செய்திகளை பகிர்வதனையும் தவிர்ப்பது நல்லது…

ரெட்மி நோட் 4 வேரியன்ட் மற்றும் விலை

2 ஜிபி ரேம் மாடல்

 • ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 MSM8953
 • Adreno 506 GPU
 • 2  GB RAM
 • ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ 6.0
 • 5 இன்ச் 1080p display
 • 32 GB internal storage
 • 13 MP பின்புற கேமரா
 • 5 MP முன்பக்க கேமரா
 • 128ஜிபி மைக்ரோ எஸ்டிகார்டு
 • விலை – ரூ.9,999

ரூ. 499 க்கு ஜியோமி ரெட்மி நோட் 4 உண்மையா ?

3 ஜிபி ரேம் மாடல்

 • ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 MSM8953
 • Adreno 506 GPU
 • 3 GB RAM
 • ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ 6.0
 • 5.5 இன்ச் 1080p display
 • 32 GB internal storage
 • 13 MP பின்புற கேமரா
 • 5 MP முன்பக்க கேமரா
 • 128ஜிபி மைக்ரோ எஸ்டிகார்டு
 • விலை – ரூ.10,999

4 ஜிபி ரேம் மாடல்

 • ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 MSM8953
 • Adreno 506 GPU
 • 4 GB RAM
 • ஆண்ட்ராய்ட் மார்ஷ்மெல்லோ 6.0
 • 5.5 இன்ச் 1080p display
 • 64 GB internal storage
 • 13 MP பின்புற கேமரா
 • 5 MP முன்பக்க கேமரா
 • 128ஜிபி மைக்ரோ எஸ்டிகார்டு
 • விலை – ரூ.12,999

ரெட்மி நோட் 4 விலை பட்டியல்

2GB/ 32GB- Rs 9,999
3GB/32GB- Rs 10,999
4GB/64GB- Rs 12,999

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here