redmi note 7 pro

Xiaomi Redmi Note 7 Pro: சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் ப்ரோ ஸ்மார்ட்போன் முதன்முறையாக ஃபிளாஷ் விற்பனை இன்றைக்கு பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது. மேலும் ரெட்மி நோட் 7 மாடலின் விற்பனையும் இரண்டாவது முறையாக தொடங்குகின்றது. இரு ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் மற்றும் Mi இணையதளத்தில் நடைபெற உள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற முதல் ரெட்மி நோட் 7 மாடலுக்கான விற்பனை சில நிமிடங்களில் முடிந்து 2 லட்சம் நபர்களால் வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் அடுத்த விற்பனை பகல் 12 மணிக்கு தொடங்குகின்றது. மேலும் 48 எம்பி கேமராவை பெற்ற ரெட்மி நோட் 7 ப்ரோவின் விற்பனை முதன்முறையாக தொடங்குகின்றது.

ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7 விலை மற்றும் வசதிகள்

6.3 அங்குல காட்சி திரை பெற்று ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. 4000mAh பேட்டரி கொண்டு செயல்படுகின்றது.  டூயல் சிம் கார்டு ஆப்ஷனுடன், 4ஜி வோல்ட்இ, 3.5mm ஆடியோ ஜாக், உள்ளிட்ட அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட MIUI 10 ஓஎஸ் கொண்டு செயல்படுகின்றது.

Redmi Note 7 மற்றும் Redmi Note 7 Pro கேமரா

கேமரா பிரிவில் ரெட்மி நோட் 7 ப்ரோவில் 48 எம்பி சோனி IMX586 மற்றும் 5 எம்பி கேமரா என டூயல் செட்டப்பை பின்புறத்தில் பெற்றுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு கேமராவிலும் செயற்கை அறிவுத்திறன் இணைக்கப்பட்டுள்ளது.

அதே போல குறைந்த விலை ரெட்மி நோட் 7 போனில் 12 எம்பி மற்றும் 2 எம்பி கேமரா என டூயல் செட்டப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு கேமராவிலும் செயற்கை அறிவுத்திறன் சேர்க்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் உடன் செயல்பட்டு 3  ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்டதாகவும், 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி உள்ள நோட் 7 ஸ்மார்ட்போன் 11,999 ரூபாய் ஆகும்.

ரெட்மி நோட் 7 ப்ரோ மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் உடன் செயல்பட்டு 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை 13,999 ரூபாய், 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட பதிப்பு 16,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணிக்கு முதல் mi.com இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

redmi note 7