இந்தியாவின் ஆல்லைன் வரலாற்றில் சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் சியோமி ரெட்மி 3S விற்பனையில் மைல்கல்லாக 40 லட்சம் என்ற விற்பனை இலக்கை 9 மாதங்களில் கடந்துள்ளது.

வரலாற்று சாதனை படைக்கும் சியோமி ரெட்மி 3S விற்பனை

சியோமி ரெட்மி 3S

இந்தியாவில் ஆன்லைன் விற்பனை மிக வேகமாக வளர்ந்து வருகின்ற நிலையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி 10.57 சதவிகித பங்களிப்பை பெற்று விளங்குகின்றது.

தொடக்கநிலை ஸ்மார்ட்போன்களில் மிகவும் வரவேற்பினை பெற்ற சியோமி ரெட்மி 3S ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் 2016ல் விற்பனைக்கு வெளியிடப்பட்டு 9 மாதங்களை கடந்த நிலையில் 40 லட்சம் மொபைல்கள் ஆன்லைன் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, ஜியோமி துனைதலைவர் மானு குமார் ஜெயின் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரெட்மி 3 எஸ்  மற்றும் ரெட்மி 3 எஸ் பிரைம் நுட்ப விபரம்

ரெட்மி நோட் 3 ஸ்மார்ட்போனை அடிப்படையாக கொண்டு மேக் இன் இந்தியா முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள ரெட்மி 3எஸ் பட்ஜெட் ரக மொபைல்போனில் 3 எஸ் மற்றும் 3எஸ் பிரைம் என இருமாடல்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசமே ரேம் மற்றும் இன்ட்ர்னல் மெம்மரி மட்டுமே.

வரலாற்று சாதனை படைக்கும் சியோமி ரெட்மி 3S விற்பனை

ரெட்மி 3எஸ் மாடலில் 2 ஜிபி ரேம் 16ஜிபி சேமிப்பு திறனுடன் கிடைக்கும் , ரெட்மி 3எஸ் பிரைம் மொபைலில் 3ஜிபி ரேம் 32ஜிபி சேமிப்பு திறனுடன் கைரேகை ஸ்கேனர் கிடைக்கும் , மற்றபடி இரு மொபைல்களும் மெட்டல் பாடியை கொண்டதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

5 இன்ச் முழு ஹெச்டி திரையுடன் கூடிய ஸ்மார்ட்போனில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் 430 ஸ்னாப்டிராகன் பிராசஸர் பெற்று ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட MIUI 7.5 வெர்சனில் இயங்குகின்றது.

இரு மொபைல்களிலும் 128ஜிபி வரையிலான கூடுதல் சேமிப்பு திறனை பெறும் வகையில் மைக்ரோஎஸ்டி கார்டினை பெறலாம்.  13 மெகாபிக்சல் ரியர் கேமராவில் தெளிவான படங்கள் 1080p வீடியோவினை பதிவு செய்யும் வகையில் இரட்டை எல்இடி பிளாஷ் மற்றும் பேஸ் டிடெக்ஷ்ன் ஆட்டோஃபோகஸ் போன்ற வசதிகள் உள்ளன. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் கேமரா இடம்பெற்றுள்ளது.

4G, Wi-Fi, GPRS/ எட்ஜ்,  GPS/ A-GPS, பூளூடூத், Glonass, வை-ஃபை 802.11 b/g/n, மற்றும் Micro-USB போன்றவற்றை பெறலாம். 4100mAh பேட்டரி பேக்கப் பெற்றுள்ளதால் நாள் முழுமைக்கும் சிறப்பான பேட்டடரி கிடைக்கும்.

புதிய ரெட்மி 4 விரைவில்

அடுத்த சில நாட்களில் ஜியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 4 மற்றும் ரெட்மி 4 பிரைம் என இரு மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here