ஜூன் 11.., சியோமி Mi லேப்டாப் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

சீனாவின் சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனையில் சிறப்பான பங்களிப்பினை கொண்டுள்ள நிலையில் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு Mi லேப்டாப் பிராண்டினை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதி செய்யும் வகையிலான டீசரை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மிக நீண்ட காலமாக இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்ற லேப்டாப் பிராண்டுகளில் சியோமி ஒன்றாகும். அந்த வகையில் இந்நிறுவனம் தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள டீசரில் “Hey there 👋, @Dell_IN, @Acer_India, @HPIndia, @Lenovo_in, @ASUSIndia. We guess it’s time to say, Hello!”. என குறிப்பிட்டு முதல் டீசரை வெளியிட்டுள்ளது.

முதற்கட்டமாக மீ லேப்டாப் மட்டுமே வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. ரெட்மி புக் லேப்டாப் அறிமுகம் குறித்த தகவல் இல்லை.

update:-

வரும் ஜூன் 11 ஆம் தேதி பகல் 12.00 மணிக்கு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சியோமி லேப்டாப் அமேசான் இந்தியா மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.