தினசரி இணைய பயன்பாட்டில் மிக முக்கியமான அங்கமாக மாறி வருகின்ற கூகுள் நிறுவனத்தின் அங்கமான யூடியூப் தளத்தில் உள்ள பலரும் அதிகம் அறிந்திராத சில ரகசியங்களை அறிந்து கொள்ளலாம்.

அதிகம் அறிந்திராத சில யூடியூப் ரகசியங்கள் இதோ..!

யூடியூப் ரகசியங்கள்

உலகின் அதிகமான பார்வையாளர்களை வீடியோ தளமாக செயல்பட்டு வருகின்ற யூடியூப் தளத்தில் இவற்றையும் அறிந்து கொள்ளங்கள்..

1. யூடியூப் கீ ஷாட்கட்கள்

வீடியோவை பார்க்கும் பொழுது ‘K’  என்ற எழுத்தை பதிவு செய்தால் வீடியோ பேஸ் அல்லது பிளே செய்ய உதவும், ‘J’  என்ற எழுத்தை பதிவுசெய்தால் ரீவைன்ட் செய்யலாம், ‘L’  என்ற எழுதுத்தை பதிவு செய்தால் முன்னோக்கி செல்லும், இவை இரண்டுமே 10 நொடிகள் வரை கிடைக்கும். முழு திரையை காண F பொத்தான் , சப்தத்தை நிறுத்த M  அழுத்தினால் போதும்.

மேலும் 1 முதல் 9 வரையிலான கீ பட்டன்களை அழுத்தினால் 10 % முதல் 90 % வரை வீடியோவை ஃபார்வேடு செய்யலாம்.

அதிகம் அறிந்திராத சில யூடியூப் ரகசியங்கள் இதோ..!

2. யூடியூப் டிவி மோட்

மிக முக்கியமாக யூடியூப் வீடியோக்களை கண்டு களிக்க தொலைக்காட்சி மோடினை பெற இணைய முகவரியை இவ்வாறு பயன்படுத்துங்கள், http:www.youtube.comtv இதன் வாயிலாக வீடியோக்களை 10 அடி தூரத்தில் இருந்தும் தெளிவாக காணலாம்.

3. GIF  படங்களாக மாற்ற

வீடியோவினை GIF வடிவத்தில் பெற விரும்பினால் உடனடியாக நீங்கள் பார்க்கும் வீடியோ முன்ன gif என்ற வார்த்தையை சேர்த்து gif youtube.com/watch/xxxxx என மாற்றினால் GIF வடிவத்தில் பெறலாம். எந்த இடத்தில் வேண்டுமானலும் கட் செய்து மாற்றலாம்.

அதிகம் அறிந்திராத சில யூடியூப் ரகசியங்கள் இதோ..!

4. எந்த நொடியில் பார்க்க வேண்டும்

நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வீடியோவின் குறிப்பிட்ட இடத்தில் யாரேனும் பாரக்க விரும்பினால் அந்த இடத்தில் உரலி முகவரியை நகலெடுக்க முடியும் அல்லது அந்த வீடியோ முகவரின் பின்னால் ?t=1m16s என்பதனை இணைத்தால் போதுமானது.

5. வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆடியோ அறிய

வீடியோவில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆடியோ அறிய http:www.mooma.sh என்ற தளத்தில் நுழைந்து வீடியோ முகவரியை உள்ளிட்டு தேடினால் ஆடியோ எங்கே எடுக்கப்பட்டது என்ற விபரத்தை உடனடியாக பெறலாம்.

அதிகம் அறிந்திராத சில யூடியூப் ரகசியங்கள் இதோ..!

6. வீடியோ தரவிறக்க

யூடியூப் வீடியோவை தரவிறக்க எண்ணற்ற ஆன்லைன் தளங்கள் செயல்பட்டு வரும் நிலையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செயலி போன்றவற்றில் ஆஃப்லைன் வாயிலாக சேமிக்கலாம்.

7. புதிய தோற்றம்

தற்பொழுது யுடியூப் தோற்றம் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.இதனை பெற http://www.youtube.com/new என டைப் செய்து சென்ற பின்னர் try it now என்பதனை கொடுத்தால் புதிய தோற்றத்தை பெறலாம், மேலும் இதில் டார்க் மோட் (dark mode) செயல்படுத்தும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here