உங்கள் வீட்டுக்கு இனி டிஜிட்டல் முகவரி - டிஜிட்டல் இந்தியாஇந்தியாவில் டிஜிட்டல் முகவரி திட்டத்தை அரசு செயற்படுத்த திட்டமிட்டு வருகின்றது. வணிக அலுவலகங்கள் மற்றும் இல்லங்கள் என அனைத்துக்கும் டிஜிட்டல் முறையில் முகவரியை செயற்படுத்த உள்ளது.

டிஜிட்டல் முகவரி

தற்போது ஒரு இடத்துக்கு செல்ல வேண்டுமெனில் இடம் சார்ந்த முறையில் முகவரி பயன்படுத்துப்பட்டு வருகின்றது, குறிப்பாக நீங்கள் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில், தெருப் பெயர், ஊர், நகரம், மாவட்டம், மாநிலம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், வரும் காலத்தில் இனி டிஜிட்டல் முறையில் முகவரியை செயற்படுத்த எழுத்து மற்றும் எண் கலப்பில் 6 இலக்க குறியீட்டை வழங்க உள்ளது. இ- லொக்கேஷன் என்ற பெயரில் செயற்படுத்த உள்ள இந்த முறையில் வரைபடம் (கூகுள் மேப், மேப் மை இந்தியா) ஆகியவற்றின் உதவியுடன் வரைபடத்தை UV77D7 என்ற பெயரில் குறிப்பிடப்பட உள்ளது.

உங்களுடைய 6 இலக்க எண்ணை பகிர்ந்து கொண்டால் அதனை மேப் மை இந்தியா இணையதளம் மற்றும் ஆப் வாயிலாக மிக தெளிவாக வரைபடத்தின் உதவியுடன் முகவரியை அறிந்து கொள்ளலாம்.

இந்த முறை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் நேர விரயம். தேவையற்ற அலைச்சல், எரிபொருள் செலவு உட்பட பல்வேறு வழிகளில் ஆற்றலை சேமிக்க மிக உதவிகரமாத்தாக அமைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here