மணிக்கணக்கில் ஃபேஸ்புக்கில் மூழ்காமல் இருக்க யுவர் டைம்

பிரசத்தி பெற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக் யுவர் டைம் (Your Time) என்ற பெயரில் , நீங்கள் ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தை கணக்கிட உதவும் வகையிலான அம்சத்தை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை தொடர்ந்து இணைத்துள்ளது.

ஃபேஸ்புக் யுவர் டைம்

மணிக்கணக்கில் ஃபேஸ்புக்கில் மூழ்காமல் இருக்க யுவர் டைம்

நவீன தலைமுறையினர் சமூக வலைதளங்கள் பல மணிநேரம் மூழ்கி கிடக்கும் நிலையில், தினந்தோறும் எத்தனை மணி நேரம் ஃபேஸ்புக்கில் செலவிடுகிறோம் என்பதனைவ அறியும் நோக்கில் ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு என இரு ஆப்களிலும் கணினி பயனாளர்களுக்கும் இந்த வசதியை இந்நிறுவனம் இணைத்துள்ளது.

மேலும் தினசரி ஃபேஸ்புக் பயன்படுத்தும் நேரத்தை நிர்ணயம் செய்து அந்த நேரத்தை எட்டும்போது நமக்கு அறிவிப்பாக கிடைக்கும் வகையில் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நமக்கு நேரத்தை உணர்த்துவதுடன் நாள் , வாரம் என பல்வேறு மாறுபாடுகளில் எவ்வளவு நேரம் செலவிட்டுள்ளோம் என்பதனை அறிந்து கொள்ளலாம்.

Your Time On Facebook வசதியை பயன்படுத்தி உங்கள் பொன்னான நேரத்தை சரியான அளவில் திட்டமிட்டு பணியாற்றுங்கள்.