உலகின் முன்னணி வீடியோ தளமாக செயல்பட்டு வரும் யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ள யூடியூப் கோ பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். Youtube Go என்றால் என்ன ? இந்த செயலின் சிறப்புகள் என்ன மற்றும் முதல் பார்வை விமர்சனம்.. இதோ..

டேட்டா சேமிக்க யூடியூப் கோ - முதல்பார்வை

யூடியூப் கோ

  • 2ஜி , 3ஜி போன்ற சேவைகளில் இணையம் பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • வீடியோவை இலகுவாக தரவிறக்கம் செய்ய மற்றும் நண்பர்களுக்கு பகிர உதவுகின்றது.
  • இன்னும் வீடியோ லோட் ஆகல என்ற சொல்வதனை இனி Youtube Go வாயிலாக மறக்கலாம்.

டேட்டா சேமிக்க யூடியூப் கோ - முதல்பார்வை

Youtube Go என்றால் என்ன

இந்த செயிலியை கூகுள் அறிமுகம் செய்ய மிக முக்கிய காரணமே இந்தியாவின் அதிக பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தும் மிக குறைந்த இணைய வேகமே மிக முக்கிய காரணமாகும், குறைந்த வேகத்தில் உயர்தர யூடியூப் வீடியோவை பார்க்க வேண்டுமெனில் 10 நிமிட வீடியோவிற்கு 20 நிமிடம் காத்திருக்க வேண்டியுள்ள நிலையை போக்கும் வகையிலும் டேட்டாவை சேமிக்கவும் நன்பர்களுடன் வீடியோ ஷேரிங் இலகுவாக டேட்டா கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

டேட்டா சேமிக்க யூடியூப் கோ - முதல்பார்வை

யூடியூப் கோ முதல் பார்வை

தற்பொழுது பீட்டா நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கின்ற இந்த செயலியை விரும்பினால் நீங்கள் தரவிறக்கி சோதனை செய்து பார்க்கலாம். நாம் தரவிறக்கி சோதனை செய்ததில் மிக சிறப்பான முறையில் வீடியோவை பெற உதவுகின்றது.

டேட்டா சேமிக்க யூடியூப் கோ - முதல்பார்வை

தவிறக்கி பின்னர் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றை கொண்டு உங்களது கணக்கினை உறுதி செய்த பின்னர் யூடியூப் கோ முகப்பு பக்கம் திறக்கின்றது. சாதரன யூடியூப் ஆப் போல அல்லாமல் மிக இலகுவாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலில் தரமான பதிப்பில் 646MB உள்ள வீடியோவை வெறும் 102MB டேட்டாவில் இந்த செயலில் பார்க்கலாம்.

முதற்கட்டமாக இருவிதமான தரத்தில் வழங்கப்பட்டுள்ள கோ ஆப்பில் ஒரு முழுபடத்தை நீங்கள் பார்க்க சுமார் 100MB முதல் 200MB டேட்டாக்குள் வீடியோவின் தரத்தை அடிப்படையாக கொண்டு குறைந்த டேட்டா செலவில் காண முடிகின்றது.

குறைந்த டேட்டாவில் காணலாம் அல்லது வீடியோவை தரவிறக்கி கொள்ளும்வகையில் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளதால் டவுன்லோட் செய்து கொண்டு உங்கள் நண்பர்களுடன் இலகுவாக தரவிறக்கி வீடியோவை பதிவு செய்யலாம். தரவிறக்க அனுமதி அளிக்கப்படாத வீடியோவை தரவிறக்க இயலாது.

டேட்டா சேமிக்க யூடியூப் கோ - முதல்பார்வை

நமது பார்வையில் யூடியூப் கோ

  • மிக குறைவான டேட்டா செலவில் அதிகப்படியான வீடியோவை கண்டு களிக்க உதவுகின்றது.
  • நண்பர்களுடன் மிக இலகுவாக வீடியோ ஷேரிங் செய்யலாம்.
  • சாதரனமாக 4 நிமிட வீடியோவை காண 20MB தேவைப்பட்டால் Youtube Go வழியாக வெறும் 3 MB மட்டுமே தேவைப்படுகின்றது.
  • ஆடியோ தரத்தில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் உள்ளது.

முன்னேற்றம் தேவையா ?

  • பீட்டா நிலையில் உள்ள இந்த செயலில் பல அடிப்படை செட்டிங்ஸ் வசதிகள் வழங்கப்படவில்லை.
  • இருவிதமான வீடியோ தேர்வு ஆப்ஷன் மட்டுமே உள்ளது,அதாவது தரம் மற்றும் குறைந்த தரம் இவற்றுக்கு இடைப்பட்ட நிலையிலான தரத்தை வழங்கும் பட்சத்தில் சற்று சிறப்பான படங்களை காண இயலும்.

நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்… உங்கள் கருத்துகளை பகிருங்கள்..நன்றி……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here