யூடியூபில் உங்கள் குழந்தை எந்த வீடியோக்களை பார்க்க வேண்டும் என்பதை இனி நீங்களே தேர்வு செய்யலாம்

தங்கள் குழந்தைகள் பார்க்கும் வீடியோக்களை பெற்றோர்களுக்கு கட்டுபடுத்தும் வகையில், புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக, யூடியுப் நிறுவனம் தெரிவிதுல்ல்டஹு. இந்த புதிய டூல் மூலம் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பார்க்க வேண்டிய வீடியோகளை தேர்வு செய்து வழங்க முடியும். சர்வதேச அளவில் ஆண்டிராய்டு பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்கும் இந்த வசதி விரைவில் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூடியூபில் உங்கள் குழந்தை எந்த வீடியோக்களை பார்க்க வேண்டும் என்பதை இனி நீங்களே தேர்வு செய்யலாம்

இந்த டூல்லில் உள்ள செட்ட்டிங்சில், குழந்தைகளுக்கான புரோப்பைல்-க்கு சென்று அனுமதிக்கப்பட்ட வீடியோக்கள் மட்டுமே என்பதை செலக்ட் செய்ய வேண்டும். தற்போது குழந்தைகள் பார்க்கும் வீடியோக்கள் கட்டுபடுத்தப்பட்டு விடும். இதுமட்டுமின்றி, யூடியுபில், 8-12 வயதான குழந்தைகளுக்கு புதிய அனுபவத்தை தரும் வகையில் பல்வேறு வீடியோகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதில் பிரபலமான மியூசிக் மற்றும் கேம்ஸ் வீடியோக்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

யூடியூபில் உங்கள் குழந்தை எந்த வீடியோக்களை பார்க்க வேண்டும் என்பதை இனி நீங்களே தேர்வு செய்யலாம்