இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய நோக்கியா 6 ஸ்மார்ட்போன் மாடலின் முக்கிய விபரங்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது. நோக்கியா 6 ரூ. 16,059 விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நோக்கியா 6 ஸ்மார்ட்போன்

சீனா சந்தையில் மட்டுமே முதன்முறையாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நோக்கியா6 ஸ்மார்ட்போனில்   5.5 அங்குல முழு ஹெச்டி திரையுடன்  2.5டி கொரில்லா கிளாஸ் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் 430 SoC உடன் இணைந்த 4GB ரேம் உடன் 64GB இன்டரனல் மெம்மரி பெற்றுள்ளது. மேலும் நோக்கியா6 மொபைல் போனில் இரு சிம் கார்டு ஆப்ஷன்இடம்பெற்றுள்ளது.

இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் கேமரா டியூவல் டோன் எல்இடி பிளாஷ் ஆப்ஷனுடன் மேலும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமராவை பெற்றுள்ளது. இந்தியாவில் வருகின்ற இரண்டாம் காலண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.