ஆண்ட்ராய்டு துனையுடன் களமிறங்கியுள்ள நோக்கியா நிறுவனம் நோக்கியா ஹார்ட் என்ற பெயரில் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
முதன்முறையாக விற்பனைக்கு வெளியிடப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் அமோக ஆதரவுடன் மிக சிறப்பாக விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஃபிளாஷ் விற்பனைக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
நோக்கியா ஹார்ட்
சமீபத்தில் வெளிவந்துள்ள தகவல் குறைந்த விலை கொண்ட நோக்கியா ஹார்ட் ஸ்மார்ட்போனில் 5.2 அங்குல ஹெச்டி திரையுடன் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர் பெற்ற 2ஜிபி ரேம் இடம்பெற்றதாக விளங்கும். இதில் 13 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்று எல்இடி ஃபிளாஷ், கைரேகை ஸ்கேனர் போன்ற வசதிகளை பெற்றதாக விளங்கும்.
- 1.4 GHz Snapdragon 430 Processor
- Adreno 505 GPU
- 2 GB RAM
- ஆண்ட்ராய்ட் நௌகட் 7.0
- 5.2 இன்ச் 1080p display
- 16 GB internal storage
- 13 MP பின்புற கேமரா
- 8 MP முன்பக்க கேமரா
- விலை – ரூ.9000
image-gfxbench
வருகின்ற பிப்ரவரி 26ந் தேதி நடைபெற உள்ள மொபைல் வோல்டு காங்கிரஸ் 2017 அரங்கில் விற்பனைக்கு வரவுள்ளது.