ஹெச்எம்டி குளோபல் வாயிலாக களமிறங்கியுள்ள நோக்கியா பிராண்டின் அடுத்த பட்ஜெட் ரக நோக்கியா 2 ஸ்மார்ட்போன் பற்றிய முக்கிய விபரங்கள் ஜீக்பெஞ்ச் சோதனையின் வாயிலாக வெளிவந்துள்ளது.

நோக்கியா 2 மொபைல் முக்கிய விபரங்கள் வெளியானது.!

நோக்கியா 2 ஸ்மார்ட்போன்

நோக்கியா பிராண்டில் தற்போது நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 போன்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் ஆகஸ்ட் 16ந் தேதி பிரிமியம் ரக நோக்கியா 8 மொபைல் வெளியாக உள்ளது.

நோக்கியா 2 மொபைல் முக்கிய விபரங்கள் வெளியானது.!

நோக்கியா 3 மொபைலுடன் ஒப்பீட்ட படங்கள் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஜீக்பெஞ்ச் சோதனையில் இந்த ஸ்மார்ட்போனில் 1.27GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 212 பிராசஸர் பயன்படுத்தப்பட்டு  1ஜிபி ரேம் கொண்டிருக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கியா 3 மொபைலை போலவே டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த மாடல் 5 அங்குல திரை கொண்டதாக இருக்கலாம். கேமரா துறை விபரங்கள் பற்றி எந்த தெளிவா தகவலும் கிடைக்கப் பெறவில்லை.

நோக்கியா 2 மொபைல் முக்கிய விபரங்கள் வெளியானது.!

இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ. 5999 என்ற அளவில் விற்பனைக்கு கிடைக்க பெறலாம். ஆனால் விற்பனைக்கு அடுத்த சில மாதங்கள் தேவைப்படலாம் என தெரிகின்றது.

இந்தியாவில் தற்போது நோக்கியா 3310 உள்ளிட்ட சில ஃபீச்சர் மொபைல்கள் மற்றும் நோக்கியா 3 மொபைல் ரூ.9499 விலையிலும், நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 போன்ற மொபைல்கள் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு கிடைக்கப் பெறலாம்.

நோக்கியா 2 மொபைல் முக்கிய விபரங்கள் வெளியானது.!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here