நோக்கியா 3 , நோக்கியா 5 & நோக்கியா 3310 மொபைல் விலை விபரம்

வருகின்ற பிப்ரவரி 26ந் தேதி தொடங்க உள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2017 அரங்கில் நோக்கியா 3 , நோக்கியா 5 , நோக்கியா N சீரிஸ் மொபைல் மற்றும் நோக்கியா 3310 ஃப்யூச்சர் மொபைலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 6 ஸ்மார்ட்போன் அமோக ஆதரவினை பெற்றுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனை சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு வர ஹெச்எம்டி குளோபல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோக்கியா 3

குறைந்த விலை மொபைல் போன் பிரிவில் வரவுள்ள இதன் விலை ரூபாய் 11,000 விலையில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மொபைலில் 5.2 அங்குல ஹெச்டி திரையுடன் 2 ஜிபி ரேம் பெற்றிருக்கலாம்.

நோக்கியா 5

நோக்கியா5 மொபைல் போன்  விலை ரூபாய் 14,990 விலையில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மொபைலில் 5.2 அங்குல ஹெச்டி திரையுடன் 3 ஜிபி ரேம் பெற்றிருக்கலாம்.

இரு மாடல்களிலும் 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன்புற கேமரா பெற்றிருக்கும். இருமாடல்களுமே நோக்கியா 7.0 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.

நோக்கியா 3310

பிரசத்தி பெற்ற நோக்கியாவின் ஃப்யூச்சர் ரக மாடலாக நோக்கியா 3310 மொபைலை மீண்டும் சந்தைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் நோக்கியா நிறுவனத்தின் என் சீரிஸ் மொபைல்களும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன, முழுமையான விபரங்கள் பிப்ரவரி 26ந் தேதி தொடங்க உள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் தெரியவரும்.

 

Recommended For You